செருப்பை தலையில் தூக்கிக் கொண்டிருந்த சமூகத்தை மேயராக்கியவர் – லியோனி பேச்சால் சர்ச்சை. வீடியோ இதோ.

0
571
- Advertisement -

தந்தை பெரியார் குறித்து திண்டுக்கல் லியோனி பேசி இருந்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழில் மிகச் சிறந்த பட்டிமன்ற பேச்சாளராக திகழ்பவர் திண்டுக்கல் லியோனி. இவர் ஆசிரியர், மேடைப்பேச்சாளர், இலக்கியச் சொற்பொழிவாளர், நகைச்சுவை பட்டிமன்ற நடுவர் என பன்முகம் கொண்டு விளங்கி வருகிறார். இவர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர். இவருக்கு 2010 ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருது வழங்கப்பட்டிருந்தது. இவர் திண்டுக்கல்லில் புனித மரியன்னை மேனிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார்.

-விளம்பரம்-
Leoni Son In Vijay Sethupathi Movie

தற்போது இவர் பட்டிமன்றத்தில் நடுவராக இருந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் அரசியலில் திமுகவிற்கு ஆதரவாக பல ஆண்டுகளாக நட்சத்திர பேச்சாளராக திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் கங்கா கௌரி என்ற படத்தில் நடித்து இருந்தார். அதற்கு பிறகு இவர் எந்த படத்திலும் நடிகை வில்லை. இது தொடர்பாக திண்டுக்கல் லியோனி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேட்டி ஒன்று கொடுத்து இருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, நான் கங்கா கௌரி என்ற படத்தில் நடித்தேன்.

- Advertisement -

லியோனி நடித்த படம்:

அந்த படத்தில் வடிவேலு, அருண் குமாருக்கு அப்பாவாக நடித்து இருந்தேன். எப்படியோ நடித்து அந்த படம் ரிலீஸாகி இருந்தது. மேலும், அந்த படத்தை பார்ப்பதற்கு நானும் தியேட்டருக்கு யாருக்கும் தெரியாமல் போயிருந்தேன். அங்கே எல்லோரும் படத்தை பார்த்துவிட்டு எதற்கு இந்த லியோனிக்கு தேவை இல்லாத வேலை. வாத்தியாராக இருந்து கொண்டு ஏன் இப்படி எல்லாம் நடிக்கணும்? இதெல்லாம் தேவையா? இதற்கு பதில் பிச்சையெடுத்து இருக்கலாம் என்றெல்லாம் விமர்சித்திருந்தார்கள். அதோடு நான் சினிமாவில் நடிப்பதை நிறுத்தினேன்.

TNElection2021 Dindugal Leoni Campaign Went Wrong

லியோனி படத்தில் நடிக்காத காரணம்:

அதற்குப் பிறகு சிவாஜி படத்தில் ரஜினிக்கு மாமனாராக நடிக்க வாய்ப்பு வந்தது. அப்போது எனக்கு பள்ளியில் விடுமுறை கிடைக்கவில்லை. எனக்கு பதில் பட்டிமன்றம் ராஜா நடித்து இருந்தார் என்று கூறி இருந்தார். பின் நீண்ட வருடங்களுக்கு பிறகு திண்டுக்கல் லியோனி ஆலம்பனா படத்தில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் டீசெர் வெளியாகி இருந்தது. புகழ்பெற்ற அரேபியா கதையான அலாவுதீனும் அற்புத விளக்கும் கதை உலக மொழிகள் அனைத்திலும் சினிமாவாகிறது. அதை தழுவி தற்போது பல படங்கள் வெளியாகியிருக்கிறது. தமிழில் கூட பட்டினத்தில் பூதம் என்று அசோகன் பூதமாக நடித்திருந்தார். தற்போது இதே பாணியில் உருவாகி இருக்கும் படம் தான் ஆலம்பனா.

-விளம்பரம்-

லியோனி நடிக்கும் படம்:

இந்த படத்தை பாரி.கே. விஜய் இயக்கி இருக்கிறார். கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் பூதத்தின் எஜமான் அலாவுதீனாக வைபவும், படத்தில் முனிஷ்காந்த் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பார்வதி நாயர், திண்டுக்கல் லியோனி, காளி வெங்கட், ஆனந்தராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்து இருக்கிறார். இந்த படம் கூடிய விரைவில் திரையரங்கிற்கு வெளிவர இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் தந்தை பெரியார் குறித்து லியோனி மிக அருமையாக பேசியிருந்தார். அதில் அவர், ஒரு கடைக்காரன் அந்த காரில் உட்கார்ந்து இருப்பது யார் என்று கேட்டார்?

திராவிட கழகம் குறித்து லியோனி சொன்னது:

தந்தை பெரியார் என்று சொனதும் உடனே அவர் எல்லாத்தையும் தாண்டி எகிறி குதித்து காரை திறந்து பெரியார் காலை பிடித்துக்கொண்டு, சட்டையை கழட்டி அக்குளில் வைத்து நடந்தவர், செருப்பை தூக்கி தலையில் வைத்து நடந்தவர்கள், பள்ளிக்கூடத்தில் எங்கள் பிள்ளைகளை அனுமதித்தது கிடையாது. இப்படிப்பட்ட சமூகத்தை சேர்ந்த நான் ரோட்டில் கடை போட்டு வைத்திருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் நீங்கள் தான் ஐயா! உங்களுடைய மாற்றத்தாலும் புதிய முயற்சியினாலும் தான் எங்களுக்கு இந்த ஒரு இடம் கிடைத்திருக்கிறது. செருப்பை தலையில் தூக்கி வைத்து இருந்த சமூகத்தை மேயர் ஆக்கியவர் திராவிட கழகம் என்று திராவிட கழகத்தை குறித்து பெருமையாக லியோனி பேசியிருந்தார்.

Advertisement