நீயெல்லாம் தேங்கா சீனிவாசன் பேத்தினு வெளிய சொல்லாத – ஸ்ருதிகாவை அசிங்கப்படுத்திய லியோனி.

0
1105
sruthika
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்க போவது யாரு நிகழ்ச்சி சின்னத்திரையில் மிகவும் பிரபலமானது ஏனெற்றால் இந்த நிகழ்ச்சியில் இருந்துதான் சிவகார்த்திகேயன், அருந்த ராஜா அகமராஜ், ரோபோ சங்கர். புகழ், பாலா, வடிவேல் பாலாஜி போன்றவர்கள் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக்கினார்கள். இந்நிலையில் சமிபத்தில் கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் 4வது சீனன் சமீபத்தில் தொடங்கியது. கடந்த சீசனை போலவே இந்த சீசனிலும் பலவிதமான கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

-விளம்பரம்-

இந்நிலையில் கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சிக்கு வார வாரம் பிரபலமான ஒருவரை சிறப்பு விருந்தினராக அழைத்து வந்து நிகழ்ச்சியின் டிஆர்பி குறையாமல் பார்த்துகொள்கின்றனர். சமீபத்தில் கூட நடிகர் ராமராஜன் வந்திருந்தார். அப்போது பிக் பாஸ் பிரபலம் அமுதவாணனுக்கு தன்னுடைய கையில் இருந்த தங்க மோதிரத்தை கழற்றி அன்பளிப்பாக கொடுத்திருந்தார். இந்நிலையில் இந்த வாரம் பிரபல பேச்சாளரான லியோனி வந்திருக்கிறார்.

- Advertisement -

லியோனி :

தமிழில் மிகச் சிறந்த பட்டிமன்ற பேச்சாளராக திகழ்பவர் திண்டுக்கல் லியோனி. இவர் ஆசிரியர், மேடைப்பேச்சாளர், இலக்கியச் சொற்பொழிவாளர், நகைச்சுவை பட்டிமன்ற நடுவர் என பன்முகம் கொண்டு இருக்கிறார். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இவருக்கு 2010 ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருது வழங்கப்பட்டிருந்தது. மேலும் லியோனி திண்டுக்கல்லில் புனித மரியன்னை மேனிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார்.

சினிமா ரீஎண்ட்ரி :

தற்போது இவர் பட்டிமன்றத்தில் நடுவராக இருந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் அரசியலில் திமுகவிற்கு ஆதரவாக பல ஆண்டுகளாக நட்சத்திர பேச்சாளராக திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் கங்கா கௌரி என்ற படத்தில் நடித்து இருந்தார். அந்த படத்தில் வடிவேலு, அருண் குமாருக்கு அப்பாவாக நடித்து இருந்தார். அதற்கு பிறகு இவர் எந்த படத்திலும் நடிகை வில்லை. இப்படியொரு நிலையில் 25 வருடத்திற்கு பிறகு மீண்டும் பன்னிக்குட்டி என்ற படத்தின் மூலம் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

-விளம்பரம்-

சிறப்பு விருந்தினராக லியோனி :

இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் யாராவது ஒரு பிரபலம் வார வாரம் சிறப்பு விருந்தினர்களாக வருவதை போல இந்த வாரம் பேச்சாளர் லியோனி மற்றும் இயக்குனர் பாக்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தார்கள். இது தொடர்பான ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. அந்த ப்ரோமோவில் லியோனி மேடைக்கு வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை பற்றி பேச ஸ்ருதிகா நான் லேடி லியோனி என்று கூறுகிறார்.

கடுப்பாகி கத்திய லியோனி :

அதற்கு என்னை போல பேசி காட்டு என்று அவரிடம் லியோனி கேட்க ஸ்ருதிகாவும் பேசுகிறார். அவர் பேசியத்தினால் கடுப்பாகிய லியோனி நீயெல்லாம் தேங்காய் ஸ்ரீனிவாசன் பேத்தி என்று வெளியில் சொல்லிக்கொல்லாதே. ஒரு மிமிக்கிரி கூட பண்ண தெரியல என்று கோபப்படுகிறார். மேலும் பாலா பேசியதை கேட்டு கடுப்பாகி என்னுடைய குரலே எனக்கு மறந்து போய்விட்டது என்று கத்துகிறார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகிய நிலையில் இது மற்ற நிகழ்ச்சிகளில் நடப்பதை போல ஒரு பிராங்காக இருக்கலாம் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement