நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த இயக்குனர் அஜய் ஞானமுத்து திருமணம் – யார் எல்லாம் வந்து இருக்காங்க தெரியுமா?

0
116
- Advertisement -

இயக்குனர் அஜய் ஞானமுத்துக்கு திருமணம் ஆகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக அஜய் ஞானமுத்து திகழ்கிறார். இவர் முதலில் பிரபல இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸிடம் தான் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார். குறிப்பாக, இவர் விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த துப்பாக்கி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார்.

-விளம்பரம்-

அதற்கு பின் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்திருந்த டிமாண்டி காலனி படத்தின் மூலம் அஜய் ஞானமுத்து இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார். இவர் முதல் படத்திலேயே தன்னுடைய வித்தியாசமான முயற்சியால் பலரின் கவனத்தியும் ஈர்த்தார். இந்தப் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இதைத்தொடர்ந்து இயக்குனர் அஜய் ஞானமுத்து அவர்கள் நயன்தாரா- விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியிருந்த இமைக்கா நொடிகள் என்ற படத்தை இயக்கியிருந்தார்.

- Advertisement -

அஜய் ஞானமுத்து திரைப்பயணம்:

இந்த படத்தில் அனுராக் கஷ்யப், அதர்வா உட்பட பலர் நடித்திருந்தார்கள். கிரைம் கில்லர் பாணியில் வெளியாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து இவர் விக்ரம் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த கோப்ரா என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ இந்த படத்தை தயாரித்தது. இந்த படத்தில் விக்ரமுடன் ஸ்ரீநிதி செட்டி, இர்பான், ஆனந்தராஜ், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

டிமாண்டி காலனி 2 படம்:

பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருந்த இந்த படம் பெரிய அளவு வெற்றி பெறவில்லை. இந்த படத்திற்காக விக்ரம் பல கெட்டப் போட்டு இருந்தார். இருந்துமே படம் தோல்வி தான். இதை அடுத்து இவர் டிமாண்டி காலனி படத்தினுடைய இரண்டாம் பாகத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் அருள் நிதியுடன் இணைந்து பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன், முத்துக்குமார், பிக் பாஸ் புகழ் அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன் உட்பட பலர் நடித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

அஜய் ஞானமுத்து இயக்கும் படம்:

இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இதன் மூலம் அஜய் ஞானமுத்து மீண்டும் தமிழ் சினிமா உலகில் கம்பேக் கொடுத்திருந்தார் என்றே சொல்லலாம். கடந்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸில் இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனையும் செய்திருந்தது. இதை அடுத்து இவர் விஷால் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் இயக்குனர் அஜய் ஞானமுத்துக்கு திருமணம் நடைபெற்று இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஜய் ஞானமுத்து திருமணம்:

அதாவது, இவர் தன்னுடைய நீண்ட நாள் காதலியை தான் திருமணம் செய்திருக்கிறார். இவர்களுடைய திருமணம் கிறிஸ்தவ முறைப்படி தேவாலயத்தில் தான் நடைபெற்று இருக்கிறது. இதை அடுத்து இவருடைய வரவேற்பு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்று இருந்தது. இதில் விக்ரம், இசையமைப்பாளர் ஹிப்பாப் ஆதி உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள். தற்போது இவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement