வாழை படத்தோடு, கொட்டுக்காளி திரைப்படத்தை போட்டி போட வைத்ததே ஒரு வன்முறை தான் – இயக்குனர் அமீர்

0
225
- Advertisement -

‘கொட்டுக்காளி’ திரைப்படத்தை குறித்து இயக்குனர் அமீர் கூறி இருக்கும் விஷயம்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான காமெடி நடிகராக இருந்து, தற்போது ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார் சூரி. சமீப காலமாக இவர் நடித்த அனைத்து படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுவதோடு, வசூல் சாதனையும் செய்து வருகிறது. தற்போது சூரியின் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம்தான் ‘கொட்டுக்காளி’.

-விளம்பரம்-

இப்படத்தை இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே ‘கூழாங்கல்’ என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரித்திருக்கிறார். இப்படத்தில் சூரி, அன்னா பென் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியவதற்கு முன் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல்வேறு விருதுகளைப் பெற்று இருந்தது.

- Advertisement -

கெவி பத்திரிகையாளர் சந்திப்பு:

அதாவது கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள ‘வெள்ளக்கெவி’ கிராமத்தைப் பற்றியும், அந்தப் பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்களின் கதையை மையப்படுத்தி நிஜமான சம்பவங்களின் பின்னணியை வைத்து உருவாக்கியுள்ள படம் தான் ‘கெவி’. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றுள்ளது. அதில்,அப்படக் குழுவினரோடு திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்ட நிலையில் இயக்குனர் அமீரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய அமீர், ஒரு திரைப்படம் என்பது பார்ப்பவர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

அமீர் பேசியது:

ஒரு படத்தை எடுக்கும்போது அந்தப் படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம், பல வேதனைகளை அனுபவித்தோம் என்று சொல்வதால் மட்டும் அப்படம் பார்வையாளர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தாது என்று கூறியுள்ளார். மேலும் அவர், நம் அனைவருக்கும் வாச்சாத்தி சம்பவம் நினைவிருக்கும். 18 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட ஒரு கொடூர சம்பவம் அது. அதை மையப்படுத்தி ஒரு திரைப்படம் வந்தது. ஆனால், அந்தப் படத்தை நம்மால் உட்கார்ந்து கூட பார்க்க முடியாது, அந்த அளவுக்கு போர் அடிக்கும். அந்த வலியை நம்மால் உணரவே முடியாது.

-விளம்பரம்-

கொட்டுக்காளி குறித்து:

மேலும், சமீபத்தில் வெளியான ‘வாழை’ ஒரு மெயின் ஸ்ட்ரீம் சினிமா. அதனால் தான் இவ்வளவு வரவேற்பு அந்த படத்திற்கு கிடைத்துள்ளது. ஆனால், ‘கொட்டுக்காளி’ ஒரு ஃபெஸ்டிவல் திரைப்படம். அது மெயின் ஸ்ட்ரீம் படம் கிடையாது. அதற்காக நான் அதை நல்ல படம் இல்லை என்று சொல்லவில்லை. பல சர்வதேச விருதுகளை பெற்ற ஒரு படத்தை கொண்டு வந்து ஒரு மெயின் ஸ்ட்ரீம் சினிமாவோடு போட்டி போட வைத்ததே வன்முறைதான். அதனால்தான், 150 ரூபாய் கொடுத்து படம் பார்ப்பவர்கள் ‘ என்னங்க படம் எடுத்து வச்சிருக்காங்க? ‘ என்ற திட்டுவதை நம்மால் பார்க்க முடிகிறது.

சிவகார்த்திகேயன் செய்த தவறு:

இந்த படத்தை நான் தயாரித்து இருந்தால், தியேட்டருக்கு கொண்டு வந்திருக்க மாட்டேன். அதை வணிக நோக்கத்தில் கொண்டு வந்து திணிக்க வேண்டிய அவசியம் இல்லை. கொட்டுக்காளி படத்தின் தயாரிப்பாளர் ஒரு பிரபல நடிகராக இருக்கிறார். அவர் தன்னுடைய செல்வாக்கை வைத்து, ஏதேனும் ஒரு ஓடிடி தளத்தில் அப்படத்தை விற்றிருக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
இப்படி இயக்குனர் அமீர் கொட்டுக்காளி குறித்து பேசி இருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement