சேது படத்தில் நடித்துள்ள அமீர் – இதுவரை நோட் செய்துள்ளீர்களா?

0
6438
vikram
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அமீர். இவர் மதுரையில் பிறந்து வளர்ந்தவர். இவர் பொறியியல் படிப்பு படித்து முடித்துள்ளார். 2002 ஆம் ஆண்டு இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக தன்னுடைய திரையுலக பயணத்தை தொடங்கினார். பிறகு மௌனம் பேசியதே என்ற படத்தை இவர் தயாரித்தார். தற்போது இவர் Teamwork Production House என்ற பெயரில் சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனத்தை வைத்துள்ளார். அமீர் சுல்தான் அவர்கள் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்டவர்.

-விளம்பரம்-

மேலும், இவர் இயக்கத்தில் வெளிவந்த ராம், பருத்திவீரன், ஆதிபகவன், பேரன்பு கொண்ட பெரியோர்களே படம் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இன்றும் இவர் இயக்கிய ராம், பருத்தி வீரன் படம் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவர் நடிகராக நடித்த படத்தின் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டிருக்கும் பாலா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த படம் சேது. இந்த படத்தில் விக்ரம், அபிதா, சிவக்குமார் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை கண்டது. விக்ரம் அவர்களின் திரை உலக பயணத்தில் இந்த சேது படம் ஒரு மைல் கல்லாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் ஒரு காட்சியில் அமீர் நடித்து உள்ளார். தற்போது அந்தப் படத்தின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இது இயக்குனர் அமீரா!! என்றும் கேட்டு வருகிறார்கள். இதை பார்த்து பலரும் ஷேர் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

-விளம்பரம்-
Advertisement