நடிகர் சந்தானத்தை இயக்குனர் அமீர் வறுத்தெடுத்து இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் கவுண்டமணி, செந்திலுக்கு பிறகு காமெடியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் சந்தானம். இவர் நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது தமிழ் நகைச்சுவை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தனியார் டிவி நிகழ்ச்சியின் மூலம் தான் மீடியாவிற்குள் நுழைந்தார். அதன் மூலம் கிடைத்த பிரபலத்தினால் இவர் படத்தில் சிறு சிறு காட்சியில் தோன்றியிருந்தார்.
இவர் கடந்த சில வாருடங்களாக சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இவர் ஹீரோவாக நடித்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், சமீப காலமாக சந்தானம் நடிப்பில் வெளியான சபாபதி, டிக்கிலோனா, பாரிஸ் ஜெயராஜ், பிஸ்கோத், டகால்டி, குலு குலு போன்ற படங்கள் எல்லாம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை. சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளிவந்த படம் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ .
சந்தானம் நடிக்கும் படங்கள்:
இப்படம் தெலுங்கில் நவீன் பொலிசெட்டி நடிப்பில் வெளியான படம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. கடைசியாக சந்தானம் நடிப்பில் வெளியான படம் “கிக்”. இந்த படம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது. தற்போது சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் படம் வடக்குப்பட்டி ராமசாமி. இந்த படத்தில் சந்தானதிற்க்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.
வடக்குப்பட்டி ராமசாமி படம்:
சந்தானம் நடித்த டிக்கிலோனா படத்தை இயக்கிய கார்த்திக் யோகி தான் இந்த படத்தையும் இயக்கி இருக்கிறார்.
இந்த படத்தில் நிழல்கள் ரவி, தமிழ், ஜான் விஜய், எம் எஸ் பாஸ்கர், ரவி மரியா உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். பீப்பிள் மீடியா ,நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த படம் பிப்ரவரி இரண்டாம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. பின் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.
படத்தின் சர்ச்சை:
இந்த ட்ரெய்லரில் வரும் பெரியார் குறித்த காட்சி தான் சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. குறிப்பாக, அதில் சந்தானம் அவர்கள், நான் அந்த ராமசாமி இல்லை என்று கூறி கூறியிருப்பார். இது அவர் பெரியாரைக் குறித்து தான் கூறியிருக்கிறார் என்று விமர்சித்து இருக்கிறார்கள். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கடந்த வாரம் இது தொடர்பாக கூட படத்தின் இயக்குனர் விளக்கம் கொடுத்து பேட்டி அளித்து இருந்தார். இருந்தாலும், சிலர் சந்தானத்தை திட்டி வருகிறார்கள்.
டேய் சங்கி டாய்லி @iamsanthanam கேட்டுச்சா…?? pic.twitter.com/sGjTWm1BI0
— கோரைப்பல்புலி லியோதாஸ் 🔥🦁🐯🗡🧊🦅❤ (@Koraippalpuli20) January 25, 2024
இயக்குனர் அமீர் பேட்டி:
இந்நிலையில் இது குறித்து இயக்குனர் அமீர் பேட்டியில், பெரியாரை குறித்து வரும் விமர்சனங்களை எல்லாம் நான் கண்டிக்கிறேன். சமீபத்தில் கூட சந்தானம், நான் அந்த ராமசாமி கிடையாது என்று சொல்லி இருந்தார். உண்மையாலுமே, நீ அந்த ராமசாமி கிடையாது தான். அவரிடத்தை உன்னால் பிடிக்க முடியாது. அவர் இடத்தை பிடிக்கிற தகுதியும் கிடையாது. ஆயிரம் ஜென்மம் எடுத்து வந்தாலும் அந்த இடத்திற்கு உன்னால் வர முடியாது. எல்லோருமே அவரையும் பெரியார், தந்தை பெரியார், ஈவெரா என்று தான் அழைப்பார்கள். இதெல்லாம் அன்பின் பெயரால் கொடுத்தது. பெயரில் கூட சாமி வைக்க வேண்டாம் என்று நினைப்பவர் என்று கூறியிருக்கிறார்.