நெறய பாத்துட்டோம், இதெல்லாம் கொஞ்ச நாளைக்கு தான் – அன்று மேடையில் Skவை நக்கலடித்த அமீர் பின் அவரை பற்றிய பேசிய வீடியோ.

0
238
sivakarthikeyan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். பின் தனது கடின உழைப்பால் இன்று சினிமாவில் தனக்கென்று ஒரு நல்ல இடத்தை பிடித்திருக்கிறார். தற்போது இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டவர்.

-விளம்பரம்-

மேலும், நீண்ட நாட்களுக்கு பிறகு சிவகார்த்திகேயனின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் டாக்டர். இந்த படத்தை நெல்சன் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தில் பிரியங்கா, அர்ச்சனா, யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தில் ஆக்ஷனுக்கு இணையாக காமெடி காட்சிகள் இடம் பெற்றிருப்பது படத்திற்கு பக்கபலமாக இருந்தது. இதனை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் அயலான், டான் போன்று பல படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார்.

- Advertisement -

என்றும் மாறாத சிவா :

இப்படி இவர் சினிமா துறையில் உச்சத்தில் உயர்ந்து கொண்டு சென்றாலும் இன்னும் பழைய நினைவுகளை மறக்காமல், மாறாமல் இருக்கிறார். விஜய் டிவியில் இவர் தன்னுடைய பயணத்தை தொடங்கினாலும் அங்கிருக்கும் நபர்களுடன் இன்னும் பேசிக்கொண்டும், எப்பவுமே போல் அதே குணத்துடன் திகழ்கிறார். இதைப் பற்றி பலரும் பேட்டிகளில் பேசி இருக்கிறார்கள்.

காலில் விழுந்த சிவகார்த்திகேயன் :

இந்நிலையில் இயக்குனர் அமீர் அவர்கள் சிவகார்த்திகேயன் குறித்து பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் அமீரின் காலில் சிவகார்த்திகேயன் விழுந்த போது நடிகர்கள் எல்லாம் ஆரம்பத்தில் இப்படித்தான் காலில் விழுந்து பணிவாக இருப்பார்கள். இப்படித்தான் நடந்து கொள்வார்கள். போகப்போக மறந்துவிடுவார்கள். எனக்குத் தெரிந்து சினிமாத்துறையில் நுழையும்போது ஒரு மாறி நடந்து கொள்வார்கள். பிறகு படங்களில் நல்ல ஹிட் கிடைத்தவுடன் வேற மாறி நடந்து கொள்வார்கள்.

-விளம்பரம்-

அதே அமீர் சிவகார்த்திகேயன் பற்றி :

ஆனால், என்றென்றும் மாறாமல் ஒரே மாதிரி இருப்பது ரஜினிகாந்த் தான். அவருக்கு பிறகு சிவகார்த்திகேயன் தான் என்று கூறி இருக்கிறார். இவர் பேசிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அதேபோல் சென்னையில் நடைபெற்ற ஆர் ஆர் ஆர் படத்தின் ப்ரோமோஷன் விழாவில் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்தார்.

RRR விழாவில் கவனத்தை ஈர்த்த Sk :

அந்த விழாவில் குழந்தைகள் எல்லோரும் சேர்ந்து நடனமாடி இருக்கிறார்கள். அதற்கு தொகுப்பாளர்கள் வாழ்த்துக்கூறி பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். உடனே சிவகார்த்திகேயன் ட்ரம்ஸ் வாசித்தவரையும் பற்றி பேசுங்கள் என்று சைகை செய்து இருக்கிறார். இதை பார்த்து என்ன மனுஷன்! இவர் கலைஞர்களையும் ஊக்குவிக்கும் நல்ல உள்ளம் கொண்டவர் என்று பாராட்டித் தள்ளி இருக்கிறார்கள்.

Advertisement