வணங்கான் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் விமர்சனத்திற்கு இயக்குனர் பாலா கொடுத்து இருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் பாலாவும் ஒருவர். இவர் சினிமாவில் பிரபலமான இயக்குனரான பாலு மகேந்திராவின் படைப்பில் இருந்து உருவாக்கப்பட்டவர். அதுமட்டுமில்லாமல் பாலா அவர்கள் சினிமா உலகில் இயக்குனர் ஆன முதல் படத்திலேயே தேசிய விருது பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பின் இவர் சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார், வர்மா போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இருந்தார். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதோடு இவர் இயக்கிய எல்லா படங்களுமே விருதுகள் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக பாலா படங்களில் முன்னணி நடிகர்கள் நடிக்கவே தயங்குவார்கள்.
வணங்கான் படம்:
அது மட்டும் இல்லாமல் பாலா அவர்கள் இயக்குனர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளரும் ஆவார். சமீபத்தில் இவர் ‘வணங்கான்’ என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் ஹீரோவாக அருண் விஜய் நடித்தார். இந்த படத்தை அருண் காமாட்சி, இயக்குனர் பாலாவும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரோஷினி நடித்திருக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். பொங்கல் விருந்தாக வெளியாகி இருக்கும் இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்:
இப்படி இருக்கும் நிலையில் வணங்கான் படத்தை விமர்சித்து ப்ளூ சட்டை மாறன் வீடியோ போட்டு இருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பாலா,
வணங்கான் படத்தில் லாஜிக் மீறல் இருப்பதாக விமர்சனம் கொடுத்திருக்கிறார். ஜெயிலுக்குள் ரெண்டு பெண்கள், பாதரியார் மட்டும் எப்படி ஈசியாக உள்ளே போக முடியும். இது லாஜிக் மீறல் இல்லையா? என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். ஆனால், அந்த காட்சி வருவதற்கு முன்னாடியே கோர்ட் சீன் வரும்.
இயக்குனர் கொடுத்த விளக்கம்:
அதில் நீதிபதி, நோ ஜுடிசரி, நோ போலீஸ் கஸ்டடி என்று நோயாளி பிரிவில் வைக்க வேண்டும் என்று சொல்லி இருப்பார்கள். நோயாளிகள் இருக்கும் பிரிவிற்கு தான் ஹீரோயின் சென்று இருப்பார். அது சிறை கிடையாது. ஊருக்கு வெளியில் இந்த மாதிரி ஒரு பில்டிங் இருக்கும். அதற்கு நோயாளிகள் பிரிவு என்று பெயர். இதை படத்தில் சரியாக கவனித்து இருந்தால் புரிந்து இருக்கும் என்று கூறி இருக்கிறார். படத்தில் காது கேளாத, வாய் பேச முடியாத ஆதரவற்றோர் இல்லத்தில் கோட்டி (அருண் விஜய்) வேலை பார்த்து வருகிறார்.
வணங்கான் பட கதை:
அங்குள்ள சிலர், அங்கிருக்கும் கண் தெரியாத பிள்ளைகள் குளிப்பதை பார்த்துவிட, அவர்களில் இருவரை கொடூரமாக கொன்று காவல் நிலையத்திலும் ஆஜராகி விடுகிறார் கோட்டி. அதற்குப் பிறகு என்ன ஆனது? அதாவது என்ன காரணத்திற்காக அந்த கொலையை கோட்டி செய்தான் என்று நீதிமன்றமும், காவல்துறையும் துருவி துருவி கேட்கிறது. அதற்கு கோட்டி பதில் சொன்னாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதி கதை.