‘தி பேமிலி மேன் 2’ தொடரை உடனே நிறுத்துங்க, இல்லன்னா – இயக்குனர் பாரதி ராஜா எச்சரிக்கை அறிக்கை.

0
803
sam
- Advertisement -

சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள ‘தி பேமிலி மேன்’ தொடரை தடை செய்ய வேண்டும் என்று இயக்குனர் பாரதி ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சமந்தா நடிப்பில் மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, நீரஜ் மாதவ், சந்தீப் கிஷன் போன்றவர்கள் நடித்துள்ள தி பேமிலி மேன் வெப் தொடர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த தொடரின் ட்ரைலர் வெளியான போதே இந்த தொடரில் தமிழகர்களை தீவீரவாதிகளாக காட்டவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனால் இந்த தொடரை புறக்கணிக்க வேண்டும் என்று பலர் கூறி வருகின்றன. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த தொடர் வெளியானால் கடும் விளைவுகளை செந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விட்ட இருந்தார் சீமான்.

-விளம்பரம்-

ஆனால், பலரின் எதிர்ப்பையும் மீறி இந்த தொடர் வெளியாகி உள்ளது. இப்படி ஒரு நிலையில் இந்த தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் இனத்திற்கு எதிரான தி பேமிலி மேன் 2 இணையத் தொடரை நிறுத்த தமிழர்களும் தமிழ்நாட்டு அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் கோரிக்கை வைத்த பிறகும் கூட இந்திய ஒன்றிய அரசு அத்தொடரை நிறுத்த உத்தரவு பிறப்பிக்காமல் மெளனம் காப்பது எங்களுக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

இதையும் பாருங்க : காருக்குள் பெண் தோழி மற்றும் நண்பர்களுடன் விஜய் மகன் அடித்துள்ள கூத்து – வைரலாகும் வீடியோ.

- Advertisement -

தமிழீழப் போராளிகளின் விடுதலை போராட்டக் களத்தையும், அவர்களின் வரலாற்றையும் அறியாத ,தகுதியற்ற நபர்களால், தமிழின விரோதிகளால் இத்தொடர் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை தொடரின் காட்சிகள் உணர்த்துகின்றன.அறமும் வீரமும் தன்னலமற்ற ஈகமும் செறிந்த போராட்ட வரலாற்றை கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடும் தமிழினத்தின் மீது மிகுந்த வன்மத்தோடும் தொடரை உருவாக்கியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இத்தொடரை உடனே நிறுத்த மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் மாண்புமிகு திரு.பிரகாஷ் ஜவடேகர் உத்தரவிடவேண்டும்.

இத்தொடரில் தமிழ் , முஸ்லீம் , வங்காளி என குறிப்பிட்ட இனமக்களுக்கு எதிரான மன நிலையோடு தொடர்ச்சியாக எடுக்கப்படுவதை அனைவரும் அறிவீர்கள்.தி பேமிலி மேன் 2 தொடரை ஒளிபரப்பும் அமேசான் நிறுவனம் தாமாக முன்வந்து உடனடியாக ஒளிபரப்பை நிறுத்த வேண்டும்.எங்கள் வேண்டுகோளை புறக்கணித்து தொடர்ந்து OTT தளத்தில் வெளிவந்தால் அமேசான் நிறுவனத்தின் அனைத்து விதமான வர்த்தகத்தையும் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்கள் பங்கெடுப்பதை தவிர்க்கவோ தடுக்கவோ இயலாது என்பதை கோடிட்டுக்காட்ட விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement