மா பொ சி பட தலைப்பை மாற்ற சொன்னது சிவகுமார் தான்- உண்மையை உடைத்த இயக்குனர் போஸ் வெங்கட்

0
357
- Advertisement -

மா பொ சி பட தலைப்பு மாற்றம் குறித்து இயக்குனர் போஸ் வெங்கட் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் போஸ் வெங்கட். இவர் நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட இயக்குனர், திமுக தலைமை கழக பேச்சாளர், இயக்குனர் என பன்முகம் கொண்டவர். இவர் 2003 ஆம் ஆண்டு மீடியாவிற்குள் நுழைந்து தற்போது வரை படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் தொலைக்காட்சியிலும் பல நாடகங்களில் நடித்திருக்கிறார். அதிலும் சன் டிவியில் ஒளிபரப்பான ‘மெட்டி ஒலி’ சீரியலின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார். இந்த சீரியலில் போஸ் என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்தார். இதன் மூலம் தான் இவருக்கு ‘போஸ் வெங்கட்’ என்ற பெயரே வந்தது. மேலும், இந்த சீரியல் மூலம் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்தது. பின் நடிகர் போஸ் வெங்கட் அவர்கள் ‘கன்னி மாடம்’ என்ற படம் மூலம் முதன் முறையாக சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார்.

- Advertisement -

போஸ் வெங்கட் திரைப்பயணம்:

சில வருடங்களுக்கு முன் இந்த படம் வந்தது. சென்னையில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கும் போது போஸ் வாழ்க்கையில் நடந்த மற்றும் எதிர்கொண்ட உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது தான் இந்த படத்தின் கதை. இந்த படத்தைப் பார்த்து திரையுலகப் பிரபலங்கள், நெட்டிசன்கள், ரசிகர்கள் என அனைவரும் பாராட்டி இருந்தார்கள். ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு படம் வசூல் செய்யவில்லை. தற்போது இயக்குனர் போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ம பொ சி’.

மா.பொ சி படம்:

இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைத்து இருக்கிறார். இந்தப் படத்தின் தலைப்பு ‘மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்’ என்று அர்த்தம். தற்போது இந்த படத்திற்கு சார் என்று பெயர் மாற்றப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த படத்தினுடைய டீசர் நாளை வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பை மாற்றியது குறித்து பேட்டியில் இயக்குனர் போஸ் வெங்கட், ஒரு அப்பா- மகன் இருவருக்கும் இடையே நடக்கும் கதையை மையமாக வைத்து தான் இந்த படத்தை எடுத்திருக்கிறோம்.

-விளம்பரம்-

சினிமா பயணம் குறித்து சொன்னது:

அறந்தாங்கியில் தான் முழு படத்தையும் அங்கேயே முடித்து விட்டோம். இந்த படத்தை சமூக அக்கறையுடன் இயக்கியிருக்கிறேன். இதில் வித்தியாசமான விமலை அனைவரும் பார்க்கலாம். இந்த படத்தில் தயாரிப்பாளர் சிராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படி எல்லாவிதத்திலும் எனக்கு நல்ல டீம் அமைந்தததால் தான் படத்தினுடைய மொத்த படப்பிடிப்பையும் 34 நாளில் எடுக்க முடிந்தது. ஒரு நல்ல படைப்பை மக்களிடம் கொண்டு சேர்க்க வெற்றிமாறன் உதவுகிறார். இந்த படத்திற்கு மா பொ சி என்று முதலில் பெயர் வைத்திருந்தோம். அந்த படத்தின் பெயர் வெளியானதுமே நடிகர் சிவகுமார் சார் எங்களை அழைத்து, மா பொ சி என்பது ஒரு பெருந்தலைவர் உடைய பெயர்.

தலைப்பு மாற்றம்:

அவருடைய பெயரில் அவர் வாழ்க்கையை ஒரு டாக்குமெண்டரி ஆக பண்ண இருக்கிறோம். அதனால் நீங்க வேற டைட்டில் வைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார். படத்தினுடைய ஹீரோ பெயர் மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம் அதை சுருக்கி தான் மா பொ சி என்று டைட்டில் வைத்திருக்கிறோம். அதற்குப் பிறகுதான் சார் என்ற தலைப்பை வைத்தோம். அந்த சமயத்தில் தான் பிடி சார் என்ற ஒரு படம் வந்தது. பின் அவர்களிடமும் நாங்கள், சார் என்ற டைட்டில் வைத்திருக்கிறோம் என்று சொல்லி அனுமதி வாங்கி தான் டைட்டிலை அறிவித்தோம். இப்போது டீசரும் வெளியாக இருக்கிறது. சிவகுமார் சாரின் மகன் கார்த்திக் சாரும், கார்த்திக் சுப்புராஜ் சாரும் டீசரை வெளியிடுகிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

Advertisement