அவர அமானப்படுத்துன சில ஹீரோக்களை மனசுல வெச்சுதான் அதை எழுதியிருந்தேன்- இயக்குனர் சரண்.

0
10135
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் அஜித்-விஜய். தற்போது வளர்ந்து வரும் கால கட்டங்களில் இவர்கள் இருவரும் வரும் தமிழ் சினிமாவின் நம்பிக்கை தூண்கள் என்று கூட சொல்லலாம். கமல், ரஜினி படங்களுக்கு பிறகு அதிக வசூலையும் ரசிகர்கள் கூட்டத்தையும் சேர்த்தது இவர்கள் இருவரும் தான். இவர்களுக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் ரசிகர்கள் உள்ளார்கள். அதோடு பாக்ஸ் ஆபிஸில் இவர்களுடைய படம் தான் முதலிடத்தில் இருக்கும்.

-விளம்பரம்-
20yearsofamarkalam hashtag on Twitter

தமிழகத்தில் “தல, தளபதி” என்று சொன்னாலே போதும் வெறித்தனம் தான். அந்த அளவிற்கு தமிழகத்தில் ‘தல, தளபதிக்கு’ ரசிகர்கள் அதிகம்.உண்மையிலேயே அஜித்தும் விஜயும் நெருங்கிய நண்பர்கள். ஆனால், அஜித், விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லை.

- Advertisement -

ஆரம்ப காலத்தில் விஜய் மற்றும் அஜித் இருவரும் தங்களது படங்களில் மாறி மாறி வசனங்களை பேசி இருக்கின்றனர். அவை எல்லாம் இயக்குனர்கள் எழுதிய வசனம் தான் என்றாலும் விஜய்-அஜித் ரசிகர்கள் அதை ஒரு வசன யுத்தமாக தான் பார்த்தனர். அந்த வகையில் அஜித் நடிப்பில் வெளியான அட்டகாசம் படத்தில் இடம் பெற்ற பாடல்களின் ரகசியத்தை கூறியுள்ளார் சரண்.

இயக்குனர் சரண் அஜித்தை வைத்து காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம்,அசல் என்று நான்கு படங்களை இயக்கியவர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள சரண், `அமர்க்களம்’ படத்துல வர்ற `காதல் கலிகாலம் ஆகி போச்சுடா’ பாட்டுல ‘அண்ணனுக்கு ஜே காதல் மன்னனுக்கு ஜே’னு வரிகள் போட வெச்சேன்.அட்டகாசம்’ படம் பண்றப்போதல போல வருமா’னு வரிகள் வெச்சேன்.

-விளம்பரம்-

அதே போல `இமயமலையில் என் கொடி பறந்தா உனக்கென்ன?’ பாட்டு விஜய்க்கு எதிரா எழுதியது என்று சர்ச்சையெல்லாம் வந்தது. அஜித் பாட்டு விஷயத்துல எப்பவும் தலையிடவே மாட்டர். சொல்லப்போனால் இப்படி ஒரு பாட்டு நாங்க எழுதுறதே அவருக்கே தெரியாது. இந்த பாட்டு ட்யூனுக்காக `உனக்கென்ன’ன்னு முதல்ல டம்மி வரிகளை நான்தான் போட்டு வெச்சிருந்தேன். அவர் வளர்ந்துவர நேரத்துல அவரை அவமானப்படுத்துன சில ஹீரோக்களை மனசுல வெச்சுதான் அதை எழுதியிருந்தேன். அது ஒரு குறியீடு அவ்ளோதான். விஜய்க்காக எழுதப்பட்டது இல்லை. 

Advertisement