வெளியில் வந்ததும் பிக்பாஸ் ஜனனியின் முதல் படம்..! விஜய் பட இயக்குனர் கொடுக்கும் அதிர்ச்சி.!

0
479
janani

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல பரிட்சியமில்லாத முகங்கள் இருந்தாலும், அதில் ஒரு சில முகங்கள் நமக்கு மிகவும் பரிட்சியமானவார்கள் தான். அந்த வகையில் நடிகை ஜனனி ஐயரும் ஒருவர். 2011 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான ‘அவன் இவன்’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார் நடிகை ஜனனி.

Chimbudevan

- Advertisement -

ஆனால், இவர் தமிழில் முதன் முதலில் அறிமுகமானது 2009 ஆம் ஆண்டு வெளியான ‘திறு திறு துரு துரு’ என்ற படத்தின் மூலம் தான். அந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதன் பின்னர் சிம்பு நடித்த “விண்ணை தாண்டி வருவாயா” என்ற படத்திலும் ஒரு துணை இயக்குனர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பின்னர் தனது குடும்பப்பாங்கான தோற்றத்தாலும், நடவடிக்கையாலும் ரசிகர்களின் அபிமானத்தை சம்பாதித்தார் ஜனனி, அத்தோடு கடந்த வாரம் இவருக்கு இறுதி சுற்றிற்கு நேரடியாக செல்லும் வாய்ப்பும் கிடைத்தது. அடுத்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இருக்கும் நிலையில் ஜனனி பிக் பாஸ் பட்டத்தை வெல்வாரா இல்லையா என்று தெரியாது. ஆனால், வெளியே வந்ததும் ஜனனிக்கு பட வாய்ப்பு காத்துக்கொண்டிருக்கிறது.

chimbu deven

தமிழில் “இரும்பு கோட்டை முரட்டு சிங்கம், 23ஆம் புலிகேசி, புலி” போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சிம்பு தேவன் படத்தில் ஜனனியை கமிட் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனிக்காகதயாரிக்கவுள்ள இந்த படத்தில் ஜெய், வைபவ், மிர்ச்சி சிவா, பிரேம்ஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் ஜனனியை கமிட் செய்ய முடிவெடுத்தாளராக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே, பிக் பாஸ் வீட்டில் இருந்து ஜனனி வெளியே வந்ததும் அவரிடம் இந்த படம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தபடும் என்று எதிர்பார்க்கபடுகிறது.