நீ ஏன் அங்க நிக்குற. இங்க வா- ஷூட்டிங்கில் ஜோதிகாவிடம் கூறியுள்ள பரவை முனியம்மா. ஏன் தெரியுமா?

0
36500
paravai
- Advertisement -

‘சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி’ என்ற ஒரு பாடலின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் பக்கம் கட்டிப்போட்டவர் பரவை முனியம்மா. தமிழ் திரைப்படங்களில் நடிகையாகவும், நாட்டுப்புற பாடகியாகவும் திகழ்ந்து விளங்கியவர் பறவை முனியம்மா. இவர் மதுரை மாவட்டத்தில் உள்ள பரவை என்னும் ஊரை சேர்ந்தவர். அதனால் தான் இவரை ‘பரவை முனியம்மா’ என்று அழைக்கிறார்கள். இவர் தமிழ் சினிமா உலகிற்கு விக்ரம் நடிப்பில் வெளிவந்த “தூள்” எனும் படத்தின் மூலம் தான் அறிமுகமானார். பின் பல படங்களில் நடித்தார்.

-விளம்பரம்-
'தூள்' படத்தில்...

- Advertisement -

சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்த அதே தருணத்தில் பரவை முனியம்மாவுக்கு வயது முதிர்வால் உடல்நலகுறைவு ஏற்பட்டது. சமீபத்தில் தான் இவர் உடல் நலம் இன்றி காலமானார். இவருடைய இறப்பு ஒட்டுமொத்த தமிழ் சினிமா உலகையும் சோகத்தில் ஆழ்த்தி இருந்தது. இந்நிலையில் பரவை முனியம்மா அவர்கள் தூள் படத்தின் போது செய்துள்ள ஒரு விஷயம் கேட்டு அனைவரும் அசந்து போனார்கள். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது.

2003 ஆம் ஆண்டு தரணியின் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்தது தூள் படம். இந்த படத்தில் விக்ரம், ஜோதிகா, ரீமாசென், பரவை முனியம்மா, விவேக் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் பரவை முனியம்மா அவர்கள் நடித்தும், பாடியும் இருந்தார். இந்த நிலையில் இந்த படத்தின் போது நடந்த சுவாரசியமான விஷயம் ஒன்றை இந்த படத்தின் இயக்குனர் தரணி பகிர்ந்துள்ளார்.

-விளம்பரம்-
Dhool Tamil Movie Lyrics Audio Jukebox | Vikram | Jyothika - YouTube

அதில், தூள் கதையில தங்களுடைய ஊருக்காக ஹீரோ, ஹீரோயின் சென்னைக்குப் புறப்பட்டு வர்றதா இருந்தது. தனியா அவங்க ரெண்டு பேர் மட்டும் வர முடியாததுனால ஹீரோயினுடைய பாட்டி அவங்கக்கூட வர்றாங்கன்னு முடிவு பண்ணோம். அந்தப் பாட்டி கேரக்டர்ல யாரை நடிக்க வைக்கலாம்னு தேடும்போதுதான் பரவை முனியம்மா கிடைச்சாங்க. செம டைமிங் சென்ஸ் உள்ளவங்க. முதல் நாள் ஷூட்டிங் அன்னைக்கு கொஞ்சம் தயக்கமா இருந்தாங்க.

Dharani (director) - Alchetron, The Free Social Encyclopedia

அடுத்த நாள்ல இருந்து ரொம்ப சகஜமாகிட்டாங்க. நல்லா ஞாபகம் இருக்கு ஜோதிகாகிட்ட, `ஏம்மா, டைரக்டர் இங்க வந்து நிக்க சொல்றாரும்மா. நீ ஏன் அங்க நிக்குற. இங்க வா அப்போதான் படம் பிடிக்க சரியா இருக்கும்’னு சொன்னாங்க. அப்படி ஜோதிகாவுக்கே எங்க நிக்கணும்னு சொல்லிக்கொடுத்தவங்க அவங்க. மனுஷன் ஜெயிக்க முடியலையேனு ஒரு கட்டத்துல மனசை தளர்த்திடுறான். ஆனா, அவங்க அத்தனை வயசு வரைக்கும் இந்தப் புகழுக்காகக் காத்திருந்தாங்க. அந்தப் பொறுமை ஒவ்வொருவருக்கும்

Advertisement