விஜய்யிடம் கதை சொன்ன முன்னணி இயக்குனர்.! வேறு கதையை கேட்ட விஜய்.! எப்படிப்பட்ட கதை தெரியுமா..?

0
1485
vijay
- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது மாஸ் ஹீரோவாக இருப்பவர் நடிகர் விஜய். இவரது கால் சீட் கிடைத்து விடாதா என்று பல இயக்குனர்களும் வெயிட்டிங் லிஸ்டில் இறக்கின்றனர். தற்போது தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் இயக்குனரான கௌதம் மேனன், விஜய்யை வைத்து படமெடுக்க காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

vijay actor

சமீபத்தில் இதுகுறித்து பேட்டியொன்றில் தெரிவித்த கௌதம் மேனன் “விஜய் சாரை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை. அதற்காக ஒருமுறை நான் அவரிடம் ஒரு கதையை கூட கூறி இருந்தேன். ஆனால், அவர் ‘இந்த படம் வேண்டாம், வேறு மாதிரி ஏதாவது ஒரு படத்தை பண்ணுவோம்’ என்று கூறியிருந்தார்.

- Advertisement -

அதற்கு பின்னரும் அவருடன் படம் பண்ணுவது குறித்து ,அவரை நான் மூன்று முறை சந்தித்துள்ளேன்.அதனால், கண்டிப்பாக எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். அப்படி வாய்ப்பு கிடைத்தால் ஒரு காதல் கலந்த ஆக்ஷன் படமாக அது இருக்கும்” என்று கூறியுள்ளார்.

Gautham-Vasudev-Menon

பொதுவாக கௌதம் மேனன் படங்கள் என்றாலே அதில் நடிக்கும் கதாநாயகர்களை, படு ஸ்டைலிஷாக காண்பிப்பார். ஒரு வேலை விஜய் மற்றும் கௌதம் மேனன் கூட்டணி இணைந்தால், அது விஜய்க்கு ‘துப்பாக்கி ‘ போல ஒரு ஸ்டைலிஷ் மாஸ் ஹிட் படமாக அமையும் என்பதில் ஐயமில்லாமல், அவரது ரசிகர்கள் உறுதியாக நம்பி வருகின்றனர்.

Advertisement