வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஞானவேல் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் ரஜினிகாந்த். இவர் தன்னுடைய திரை பயணத்தில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது.
ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினி நடிப்பில் ஐஸ்வர்யா இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த லால் சலாம் படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதை அடுத்து தற்போது இவர் ஜெய் பீம் பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கி இருக்கும் வேட்டையன் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ஃபஹத் சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அக்டோபர் 10-ஆம் தேதி இந்த படம் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
வேட்டையன் படம்:
இந்நிலையில் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் வேட்டையன் படக் குழுவினர் கலந்து கொண்டு இருந்தார்கள். அப்போது விழாவில் இயக்குனர் ஞானவேல், ரஜினி சாருக்கு தெரிந்த ரசிகர்களை விட தெரியாத ரசிகர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். அதில் நானும் ஒருவர். இந்த நேரத்தில் நான் சூர்யா சாருக்கு நன்றி சொல்கிறேன். நான் இப்போ இந்த மேடையில் நிற்பதற்கு முக்கிய காரணம் சூர்யா சார் தான். தமிழ் சினிமாவில் எந்த நல்ல படம் வந்தாலும் ரஜினி சார் அழைத்து பாராட்டுவார்.
விழாவில் ஞானவேல் சொன்னது:
அதே மாதிரி ஜெய் பீம் படத்துக்கு ரஜினி சார் பாராட்டுவார் என்று நினைத்து சட்டை எல்லாம் வாங்கி வைத்திருந்தேன். ஆனால், அவர் கூப்பிடவே இல்லை. கொஞ்ச நாட்கள் கழித்து சௌந்தர்யா மெசேஜ் பண்ணி, அப்பாவுக்கு ஸ்கிரிப்ட் இருந்தால் சொல்லுங்க என்று கேட்டார். உடனே நான், இந்த விஷயம் அப்பாவுக்கு தெரியுமா என்று கேட்டேன். அதற்கு சௌந்தர்யா, அப்பாவும் உங்க ஜெய் பீம் படம் பாத்துட்டு ரொம்ப பிடித்து இருக்கு என்று சொன்னார். பின் நான் ரெண்டு கதை எடுத்துட்டு போனேன். ஒன்று வேட்டையன், இன்னொன்னு ஜாலியான கதை. சௌந்தர்யா, வேட்டையன் கதை கேட்டு நல்லா இருக்கு. அப்பா பண்ணினா நல்லா இருக்கும் என்று சொன்னாங்க.
ரஜினி குறித்து சொன்னது:
அதற்குப் பிறகு ரஜினி சார் கால் பண்ணி இந்த கதையை டெவலப் பண்ண சொன்னாரு. அப்ப எனக்கு நிறைய கமிட்மெண்ட் இருந்தது. இருந்தாலும் படத்தின் கதையோட வேலையை ஆரம்பித்தேன். எனக்கு படையப்பா படத்தில் வருகிற ஊஞ்சல் சீன் ரொம்ப பிடிக்கும். இந்த படத்தில் இந்த கதாபாத்திரத்திற்கு இவங்கதான் நடிக்கணும் என்று எழுதினேன். அதே மாதிரி அவங்களும் இந்த படத்தில் நடித்துக் கொடுத்தார்கள். அதற்கு காரணம் ரஜினி சார் என்ற கோல்டன் விசா தான். அதே மாதிரி தான் அமிதாப் சார், ரஜினி சாரும் செட்டில் ஒன்றாக இருப்பது நமக்கு வாழ்க்கை பாடம்.
பட அனுபவம்:
மும்பையில் சூட் நடக்கும்போது ரஜினி சார் என்னிடம், நான் செட்டுக்கு வந்த பிறகு தான் அமிதாப் சார்கிட்ட சொல்லணும் என்று சொன்னார். நானும் இதை சொல்லிவிட்டேன். ஆனால், அமிதாப் சார் ரஜினி சார் செட்டில் இருக்கிறார் என்று தெரிந்தாலே உடனே வந்து விடுவார். ரெண்டு பேரும் சரியான நேரத்துக்கு படிப்பிடிப்புக்கு வருவார்கள். ரஜினி சார் எப்போதுமே என்கிட்ட, தயாரிப்பாளர் காசு போடுறாரு. அவங்க பணம் எடுக்கணும். மக்கள் நம்பி வருகிறார்கள் ,அவர்களை ஏமாத்திட கூடாது என்று சொல்லிக் கொண்டே இருப்பார். ஒரு முறை நான், நீங்க சினிமாவுக்கு வந்து 50 வருடம் ஆகிவிட்டது. எப்படி எல்லாத்தையும் தக்க வைக்கிறீங்க என்று கேட்டேன். அதற்கு அவர், ‘Adjust, Accomodate, Adopt’ என்று நிறைய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.