சாத்தான்குளத்தில் நடந்த தந்தை, மகன் இருவரின் மரணம் தமிழகத்தையே புரட்டி போட்டு வருகிறது. காவல்துறையினர் தாக்கியதில் தந்தை, மகன் இருவருக்குமே பலத்த காயம் ஏற்பட்டு அநியாயமாக உயிர் இழந்து உள்ளார்கள். இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கொழுந்து விட்டு எரிகிறது. இந்த கொடூர சம்பவத்திற்கு நியாயம் கேட்டு நாடு முழுவதும் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், நடிகர், நடிகைகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் ஹரி அவர்கள் சாத்தான்குளம் சம்பவத்தைக் குறித்து கருத்து ஒன்று பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்துவிடக்கூடாது. அதற்கு ஒரே வழி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குவதே. காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் செயல் ஒட்டுமொத்த துறையை களங்கப்படுத்தி உள்ளது.

Advertisement

காவல்துறையை பெருமைப்படுத்தி நான் ஐந்து படம் எடுத்ததை நினைத்து இன்று மிக மிக வேதனைப்படுகிறேன் என்று கூறியுள்ளார். தற்போது இந்த கருத்து சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர்களில் ஹரியும் ஒருவர். இவருடைய படங்கள் என்றாலே அதிரடி மசாலா பானியில் இருக்கும்.

இவர் இயக்கத்தில் வெளிவந்த சாமி, அருள்,ஆறு, தாமிரபரணி, சிங்கம், வேங்கை, பூஜை போன்ற பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது. இவருடைய இயக்கத்தில் வெளிவந்த சாமி1,2 சிங்கம்1,2,3 போன்ற காவல்துறை படங்கள் மக்கள் மத்தியில் அதிக வசூல் சாதனையும் படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement