அஜித், விக்ரம் என பல நடிகர்களிடம் கேட்டேன். ஜீவா படத்தின் அனுபவத்தை பகிர்ந்த இயக்குனர்.

0
8605
jeeva
- Advertisement -

சூர்யாவை வைத்து அயன் என்னும் ஹிட் படம் கொடுத்த இயக்குனர் கே வி ஆனந்த் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த கோ படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இந்த படத்தில் ஜீவா, அஜ்மல் அமீர், கார்த்திகா நாயர், பியா பாஜ்பாய் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் இந்த படம் வெளியாகி ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்து பத்தாவது ஆண்டு ஆரம்பிக்கிறது. முதலில் இந்த படத்தில் அஜித், சிம்பு, விக்ரம் போன்ற பல நடிகர்கள் தான் ஹீரோவாக நடிப்பதாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

உண்மையில் இந்த படத்தில் என்ன நடந்தது? இவர்கள் எல்லாம் நடிக்காததற்கான காரணம் என்ன? இந்த படத்தில் ஜீவா எப்படி நடித்தார்? என்பது எல்லாம் குறித்து இயக்குனர் கே வி ஆனந்த் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, நான் ஆரம்ப காலத்தில் பத்திரிக்கையில் போட்டோகிராஃபர் வேலை பார்த்தவன். அதனால் மீடியா அனுபவங்களை வைத்து படம் பண்ணலாம் என்று யோசித்து தான் கோ படத்தின் கதையை எழுதினேன்.

- Advertisement -

கோ கதையை எழுதி முடித்த சமயத்தில் ஒரு தயாரிப்பு நிறுவனம் அஜித்தோட கால்சீட் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது அவருக்கு கதை எழுதுங்கள் என்று என்னிடம் சொல்லி இருந்தாங்க. அப்போ என்கிட்ட இருந்த கதை அஜீத்துக்கு செட் ஆகாது என்று சொல்லி விட்டேன். பின் கதையை கார்த்திக் இடம் சொன்னேன். கால்ஷீட் பிரச்சனை காரணமாக பண்ண முடியாமல் போய்விட்டது. அடுத்தது சிம்புவை வைத்து படம் பண்ணலாம் என்று தயாரிப்பாளர் எல்ரெட் குமார் கேட்டு இருந்தார்.

சிம்பு தயாராக இருந்தார். பின் அவரிடம் கதை சொன்னேன். சிம்பு ஓகே சொல்லிவிட்டார். அவரையும் ஹீரோயின் கார்த்திகா வைத்து போட்டோ ஷூட் பண்ணி இருந்தோம். அடுத்த வாரமே படத்தோட பாட்டு ஷூட் வேலைகள் எல்லாம் முடிந்து கொண்டிருந்த நிலையில் சிம்புவால் இந்த படத்தில் நடிக்க முடியாத சூழல் வந்துவிட்டது. அதற்குப் பிறகு விக்ரம் கிட்ட இந்த படத்தின் கதையை சொன்னேன். விக்ரமுக்கும் கதை பிடித்து இருந்தது. ஆனால், விக்ரம் ஏற்கனவே 3 தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கி இருப்பதால் அவரால் இந்த படத்தை பண்ண முடியாமல் போனது.

-விளம்பரம்-

எனக்கு இந்த படத்தை எடுப்பதில் நம்பிக்கை இல்லாமல் இருந்தேன். பிறகு என் போனில் பதிவுசெய்து வைத்திருந்த நடிகர்கள் எல்லாம் வரிசையாக பார்த்துட்டு இருந்தப்ப தான் ஆர்யா நம்பர் வந்தது. ஆர்யாவுக்கு கால் பண்ணேன் அவர் போனை எடுக்கவில்லை. மறுபடியும் நம்பர்களை பார்த்துட்டு இருந்தப்ப ஜீவா நம்பர் வந்தது. அவருக்கு கால் பண்ணி கதை சொல்லி டைமும் அவரிடம் வாங்கிவிட்தெண். ஜீவாவும் கதை கேட்க வந்தார். ஆனால், அவருடைய முகத்தில் ஆர்வம் இல்லாமல் இருந்தார். ஏனென்றால் இந்த படத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது எல்லாருக்குமே தெரியும்.

அதனால் இந்த படத்தில் சின்ன ரோலில் தான் ஜீவா நடிப்பார் என்று நினைத்து கொண்டார். மேலும், படத்தின் கதையை சொல்லச் சொல்ல ஜீவா நானே எல்லாம் பன்னால் சிம்பு என்ன செய்வார் என்று கேட்டார். அப்பதான் நான் சிம்பு இந்த படத்தில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது. நீங்கள் தான் இந்த படத்தின் ஹீரோ என்று சொன்ன பிறகு தான் ஜீவா கதையை ஆர்வத்துடன் கேட்டார். பிறகு நான் நடிக்கிறேன் என்று ஓகே சொல்லிவிட்டார் ஜீவா. அதற்குப் பிறகுதான் ஜீவாவை வைத்து இந்த படம் பண்ண ஆரம்பித்தோம். இதேபோல் தான் படத்தின் வில்லன் கதாபாத்திரத்திற்கும் சில சிக்கல்கள் வந்தது.

வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் சசிகுமார் கிட்ட தான் பேசி இருந்தோம். ஆனால், அவரால் இந்த படம் பண்ண முடியாதபடி சில காரணங்களால் ஏற்பட்டது. பிறகு அஞ்சாதே படத்தின் ஹீரோ நரேன், உன்னாலே உன்னாலே படம் வினய், கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலரிடம் பேசினோம். அவர்களால் நடிக்க முடியாமல் போனது. அதற்கு பிறகு தான் அஜ்மல் கிட்ட கதை சொல்லி ஓகே பண்ணோம். இந்த அளவிற்கு நடிகர்கள் முதல் ஒவ்வொரு கலைஞர்கள் வரை என கோ படம் எடுப்பதில் பல சிக்கல்கள் வந்தது. ஆனால், இந்த படத்திற்காக போட்ட முயற்சி எதுவும் வீணாகவில்லை. எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுத்தது என்று கூறினார்.

Advertisement