JD-க்கும் அவரது மாஸ்டர் செல்வத்திற்குமான ஒரு முன் கதை இப்படி இருக்கும் – பிரபல இயக்குனர் சொன்ன செம ஒன் லைன் கதை.

0
3187
- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்த திரைப்படம் நம்மவர் படத்தின் தழுவல் என்றும் கூறப்பட்டது. அதற்கு முக்கிய காரணமே இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கமலின் வெறித்தனமான ரசிகர் என்பது தான். மேலும், இந்த படத்தில் நடிகர் விஜய் முதல் பாதியில் குடிக்கு அடிமையாகி இருப்பார். மேலும், ஏன் இப்படி குடிக்கிறீர்கள் என்று யாவராவது கேட்டால் அதற்கு ஒவ்வொரு முறையும் ஒரு காரணம் சொல்லுவார்.

- Advertisement -

ஆனால், விஜய் குடிக்கு அடிமையாக காரணம் பற்றி நடிகர் நாசர், நாயகியான மாளவிகா மோகனனிடம் கூறும் போது, Vc செல்வம் தான் Jdயை இப்படி குடிக்கு அடிமையாக காரணம். அவருக்கு புற்று நோய் இருந்தது. அதற்காக அவர் சிகிச்சை எடுத்துக்கொண்ட போதிலும் அவர் இறந்துவிட்டார். அதன் பின்னர் தான் Jd இப்படி தூங்க முடியாமல் குடிக்கு அடிமையாகிவிட்டான் என்று கூறுவார். நாசர், Vc செல்வம் என்று குறிப்பிட்டது ‘நம்மவர்’ படத்தில் கமலின் பெயர். மேலும், அந்த படத்தில் அவருக்கு புற்று நோய் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒரு நிலையில் தமிழில் துருவங்கள் 16, ,மாபியா போன்ற படங்களை இயக்கிய இளம் இயக்குனர் காரத்தில் நரேன், ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் JD க்கும் செல்வத்திற்கும் முன்கதையை வைத்துப் படம் எடுத்தால் நன்றாக இருக்கு என்று கூறியுள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், ஜேடி கதாபாத்திரத்தை வெறும் குடிகாரன் என்று எளிதில் அடையாளப்படுத்திவிடலாம். ஆனால் உண்மையில் அவர் தன்னுடைய அதிர்ச்சிகரமான கடந்த காலம் மற்றும் நினைவுகளிலிருந்து மீள முடியாமல் இருக்கும் ஓர் உடைந்த நபரே.

-விளம்பரம்-
Mafia is inspired from my favourite Netflix series Narcos': Karthick Naren  - The Hindu

அந்த கதாபாத்திரம் வேண்டுமென்றே தவிர்த்து வந்த நிகழ்கால வாழ்க்கைக்கு அவர் திரும்பி வர, மிக மோசமாக மனதை பாதிக்கும் ஒரு விஷயம் தேவைபப்டுகிறது. ஏனென்றால் நம்மில் பெரும்பான்மையானவர்கள் நமது சொந்த உலகத்தில் தான் வாழ்வோம். கண்டிப்பாக சிறப்பாக எழுதப்பட்ட கதாபாத்திரங்களில் ஒன்று. லோகேஷ் கனகராஜ் அண்ணா, இன்னும் பல ஜேடிக்களை உருவாக்குங்கள்.அப்பாவி ஜான் துரைராஜுக்கும் அவரது மாஸ்டர் விசி செல்வத்துக்கும் இடையிலான பந்தம், ஒருவர் இறப்பதால் இன்னொருவர் அதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டு, அவரது மாஸான மாற்றம் என்று ஒரு முன் கதையை வைத்துப் படம் எடுத்தால் அட்டகாசமாக இருக்கும் இல்லையா? வாழ்க்கை எனும் வட்டம் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement