நடிகர் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிஅன்று வெளியாகி இருந்த சர்கார் படம் அரசியல் படமாக உருவாகி அதிமுகவினரின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.பால்வெட்டி பிரச்சனைகளை சந்தித்து வரும் இந்தப் படம் குறித்து இயக்குனரும் நடிகருமான கவிதா பாரதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சரமாரியாக கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
அதில், எல்லாருக்கும் அஸ்தியைக் கடல்ல கரைப்பாங்க, ஆனா எங்கப்பாவையே கடல்ல கரைச்சிட்டாங்க என்று கண்ணீர் விடுகிறான் சுந்தர் ராமசாமி..
அப்படியாப்பட்ட சோகப்பின்னணி கொண்ட கதாநாயகன் என்ன செய்வான்..?
தன் தந்தையின் சாவுக்குக் காரணமான சிங்கள ராணுவத்துக்கெதிராகக் குரல் கொடுப்பான்.
https://m.facebook.com/story.php?story_fbid=10213396855503220&id=1454384793
அது கஷ்டமென்றால் குறைந்தபட்சம் தன் தந்தைபோல் இனி எந்த மீனவனும் சாகக்கூடாதென மீனவ நண்பனாகத் திகழ்வான்..
ஆனால் ஜெயமோகனைத் துணைக்கொண்ட முருகதாஸின் கதாநாயகன் ஒரு மல்ட்டி நேஷனல் கம்பெனியின் தலைமை அதிகாரியாகிறான்.. வருடம் ஆயிரத்து எண்ணூறு கோடி சம்பளம் பெறுகிறான்..
அதில் ஒத்தப்பைசாகூட ராமேஸ்வரம் மீனவர்களுக்கு செலவிடவில்லை.
மாறாக தனக்கெதிரான கம்பெனிகளை அழித்து இழுத்து மூடுகிறான்..
அப்படி மூடப்பட்ட ஒரு கம்பெனியால் இருபத்தியிரண்டாயிரம் பேர் வேலையிழக்கின்றனர்..
இப்படி பல கம்பெனிகளை மூடி லட்சக் கணக்கானவர்கள் சோற்றில் மண்ணள்ளிப் போட்ட கார்பரேட் கிரிமினல் அவன் ஓட்டை யாரோ போட்டதற்காக வீறுகொண்டு எழுகிறான்.
மீத்தேன். ஹைட்ரோ கார்பன், ஸ்டெரிலைட், காவேரி எல்லாவற்றுக்கும் குரல் கொடுக்கிறான்..
ஆனால் பாவம் அந்தக் கூமுட்டைக்கு டெல்லியில் ஒரு அரசாங்கம் இருப்பதே தெரியவில்லை..
எல்லாப்பிரச்னைக்கும் காரணம் முதலமைச்சர் மாசிலாமணிதான் என்றே நம்புகிறான்.
அவரை எதிர்த்து டி.ராஜேந்தரின் உடல் மொழியிலும், சமுத்திரக்கனியின் வாய்மொழியிலும் போராடுகிறான்.போதும், மீதியை வெண்திரையில் காணுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.