தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா. காந்த கண்ணழகு, வசீகரமான மயக்கும் குரல் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர் சில்க். மாவரைக்க வந்த போது சில்க் ஸ்மிதாவை பார்த்த வினுச்சக்ரவர்த்தி ‘வண்டி சக்கரம்’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் செய்து வைத்தார். இந்த படத்தில் சில்க் என்கிற சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தில் நடித்தார்.

இதனால் தான் இவருடைய பெயர் சில்க் ஸ்மிதா என்று மாறியது. இதனை தொடர்ந்து ஸ்மிதா சினிமா திரை உலகில் 17 வருடம் பயணம் செய்தார். மேலும், இவர் ரஜினி, கமல், பிரபு போன்ற பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து இருந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருந்தார். அதோடு இப்படி ஒரு நடிகையும் இருப்பாரா! என்று அன்றைய கால பிரபலங்களும், மக்களும் விரும்பி வியந்து பார்க்க வைத்த நடிகை சில்க்.

Advertisement

சில்க் ஸ்மிதா திரைபயணம்:

இவர் கவர்ச்சிக்கு பெயர் போனாலும் நடிப்பு, நடனம் என பல திறமைகளை காட்டியவர். இதற்காக இவர் பல விருதுகளை வாங்கியிருந்தார். பின் இவருக்கு ஏற்பட்ட காதல் தோல்விகளாலும் , குடி பழக்கத்தினாலும் மன அழுத்தத்திற்கு ஆளானார். இதனால் சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டார். இவருடைய இழப்பு ஒட்டுமொத்த திரை உலகிற்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. இந்த உலகை விட்டு சில்க் ஸ்மிதா மறைந்தாலும் இன்றும் ரசிகர்கள் மனதில் மறக்க முடியாத நடிகையாக திகழ்ந்து வருகிறார். தற்போது வரை சில்க் சுமிதாவின் இறப்பு குறித்த செய்தி மர்மமாகவே இருக்கிறது.

கிருஷ்ணா வம்சி பேட்டி:

இந்த நிலையில் இயக்குனரும், நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவருமான கிருஷ்ணா வம்சி அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் சில்க் ஸ்மிதா குறித்து கூறியது, சினிமா உலகில் நுழைந்த ஆரம்பத்தில் நான் எனக்கான ஒரு இடத்தைப் பிடிக்க போராடிக் கொண்டிருந்தேன். படப்பிடிப்பு எங்கெல்லாம் நடக்குமோ எல்லா இடத்துக்கும் சென்று வேலைகளை செய்து கொடுப்பேன். அப்படி செய்து கொண்டிருக்கும் போது தான் இயக்குனர் வரப்பிரசாத் ராவிடம் அறிமுகம் கிடைத்தது. அவருடைய படத்தில் சில்க் ஸ்மிதா நடித்துக் கொண்டிருந்தார். அவரிடம் நான் வேலை செய்வதை பார்த்த சில்க் ஸ்மிதா என்னை பாராட்டி இருந்தார்.

Advertisement

சில்க் ஸ்மிதா குறித்து சொன்னது:

ஒரு கட்டத்தில் சில்க் ஸ்மிதா தன்னுடைய சொந்த தயாரிப்பில் படத்தை எல்லாம் தயாரித்தார். அவர் தயாரிப்பில் ஒரு படத்தில் நானும் சில மாதங்கள் வேலை செய்திருந்தேன். அதற்குப் பிறகுதான் எனக்கு இயக்குனராகும் வாய்ப்பு கிடைத்தது. நான் படங்களை இயக்க தொடங்கினேன். பின் ஒரு நாள் நான் அன்னபூர்ணா ஸ்டுடியோ முன்பு நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தேன். என்னை கடந்து ஒரு கார் சென்றது. அந்த காரில் யார் இருக்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. அந்த காரை நான் பெரிதாக கவனிக்கவும் இல்லை. என்னை கடந்து சென்ற கார் உடனே என்னை நோக்கி திரும்பி வந்து நின்றது.

Advertisement

சில்க் சொன்னது:

அந்த காருக்குள் இருந்தது நடிகை சில்க் ஸ்மிதா தான். அவர் கார் கண்ணாடிகளை இறக்கி, என்னை ஞாபகம் இருக்கிறதா என்று கேட்டார். உடனே நான், உங்களை மறக்க முடியுமா! என்னை நீங்கள் நினைவில் வைத்துள்ளீர்களா? இல்லையா? என்று நான் பலமுறை யோசித்து இருக்கிறேன் என்று சொன்னேன். பின் அவர், நீ இயக்கிய படங்களை பார்த்தேன், நன்றாக இருக்கிறது என்று சொன்னார். சில்க் ஸ்மிதா பொருத்தவரை டிரைவராக இருந்தாலும், மேக்கப் மேனாக இருந்தாலும் சரி தன்னிடம் வேலை செய்தவர்களை சொந்தக்காரர்கள் போல் நடத்துவார். அந்தளவிற்கு நல்ல குணம் கொண்டவர் என்று பெருமையாக பேசியிருந்தார்.

Advertisement