கைதியிடன் இருந்து களவாடிய கதையா ‘கைதி’ – லோகேஷ் கனகராஜின் ரியாக்ஷன்.

0
1981
lokesh
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். கடந்த 2019 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த படம் “கைதி”. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் அவர்கள் இசை அமைத்து இருந்தார். மேலும், இந்த படத்தில் சித்திரம் பேசுதடி நரேன், பொன்வண்ணன், மகாநதி சங்கர், ஆகியோர் நடித்து இருந்தார்கள். இந்த படம் முழுக்க முழுக்க இரவிலேயே எடுக்கப்பட்ட ஆக்ஷன், திரில்லர் படம். சிறை வாழ்க்கையை அனுபவித்த ஒரு மனிதனின் கதையை எடுத்துச் சொல்லும் படம் தான் கைதி. கைதி படத்தில் ஹீரோயின், பாடல்கள் எதுவும் இல்லாத கதைக்களமாக உருவாக்கி இருந்தார் இயக்குனர்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-8.png

விஜய்யின் பிகில் படத்திற்கு போட்டியாக கைதி படம் திரை அரங்கிற்கு வந்தது. கைதி படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை இந்தியில் எடுக்கவும் முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில் ‘கைதி 2’ படமும் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியானது.இப்படி ஒரு நிலையில் கைதி படத்தை வேறு மொழிகளில் எடுக்கவும் இரண்டாம் பாகம் எடுக்கவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ராஜீவ் ரஞ்சன் என்பவர் 2000-ஆம் ஆண்டு சென்னை புழல் சிறைச்சாலையில் தனக்கு நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தான் எழுதிய கதையை தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபுவிடம் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

மேலும், கதை பிடித்திருந்ததால், இக்கதையை படமாக்க எஸ்.ஆர்.பிரபு ஒப்புதல் வழங்கியதோடு அதற்கான முன் தொகையாக ரூ.10 ஆயிரத்தை தன்னிடம் வழங்கியதாகவும் ஆனால், லோகேஷ் கனகராஜை வைத்து இந்த படத்தை எடுத்துவிட்டதாகவும் புகார் அளித்து இருந்தார். மேலும், தான் சொன்ன கதையை வைத்து இரண்டாம் பாகத்தையும் உருவாக்கி இருப்பதாகவும் இதனால் தனக்கு நஷ்ட ஈடாக 4 கோடி ரூபாயை தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு வழங்க வேண்டுமெனவும், கேரள மாநிலம் கொல்லம் நீதிமன்றத்தில் ராஜீவ் ரஞ்சன் புகார் அளித்திருந்தார்.

இப்படி ஒரு நிலையில் கைதி படத்தை வேறு மொழிகளில் எடுக்கவும் இரண்டாம் பாகம் எடுக்கவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இப்படி ஒரு நிலையில் கைதி படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு  விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எங்களின் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் கதை, திரைக்கதை, இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த கைதி திரைப்படத்தின் ரீமேக் மற்றும் இரண்டாம் பாகம் தயாரிக்க, கேரள நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்தி ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம்.

-விளம்பரம்-

இது சம்மந்தமாக ஊடக நண்பர்கள் எங்களை தொடர்பு கொண்டு கருத்து கேட்டும் வருகின்றனர். எங்களுக்கு அவ்வழக்கின் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் தெரியாத காரணத்தால் அதைப்பற்றிய விபரங்கள் எதுவும் தற்போது வெளியிட இயலாது. அதே சமயம் கைதி சம்மந்தப்பட்ட ஊடக செய்திகளில் எங்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நாங்கள் உறுதியாக மறுக்கவோ, சட்டப்படி இதை நிரூபிக்கவோ முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் சில செய்தி நிறுவனங்கள் வழக்கின் விசாரனை முடிவு தெரியாமல், இ்த்திரைப்படம் சார்ந்த எவரையும் களங்கப்படுத்தி செய்தி வெளியிடாமல் ஊடக தர்மம் காக்கவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி என்று குறிப்பிட்டுளளார். ஆனால், இந்த விகாரம் குறித்து எந்த கருத்தும் சொல்லாமல் இருந்து வரும் லோகேஷ் கனகராஜ் எஸ் ஆர் பிரபுவின் இந்த டீவீட்டை மட்டும் ரீ – ட்வீட் செய்துள்ளார்.

Advertisement