தமிழ் சினிமா உலகில் தனெக்கென ஒரு முத்திரையை உருவாக்கியவர் தளபதி விஜய். இவருக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பிகில் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் அவர்கள் மாநகரம், கைதி ஆகிய வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் “மாஸ்டர்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். தளபதியும், மக்கள் செல்வனும் இந்த படத்தில் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். இதனாலே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த படத்தில் இவர்களுடன் மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், மேத்யூ ப்ரேம், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் நடிகர் விஜய் அவர்கள் கல்லூரி பேராசிரியாக நடிக்கிறார். நடிகை மாளவிகா மோகனன் கல்லூரி மாணவியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் படத்தை பிரிட்டோ தயாரித்து வருகிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் போஸ்டர்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

Advertisement

மேலும், இந்த படத்தின் குட்டி கதை பாடல் வெளியாகி சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் முழுவதும் முடிவடைந்து விட்டதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் தெரிவித்து உள்ளார். நேற்று தான் மாஸ்டர் படத்தில் இருக்கும் ஒரு சில பேட்ச் ஒர்க் எல்லாம் செய்யப்பட்டு முடிந்தது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்தது தொடர்பாக லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் கூறியது, 129 நாட்கள் இடைவெளி அற்ற மாஸ்டர் படப்பிடிப்பு நடந்தது. இது புன்னகைக்கும் கண்களுடன் புன்னகை தவழும் முகம். இந்த பயணம் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது.

என்னையும் என் குழுவையும் நம்பியதற்கு இந்த தருணத்தில் விஜய் அண்ணாவுக்கு நன்றி சொல்கிறேன். என்னுடைய இயக்க குழு இல்லாமல் இந்த இமாலய பணியை எளிதில் முடித்திருக்க முடியாது. உங்களை நினைத்து பெருமை அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார். மாஸ்டர் படத்தின் சூட்டிங் முழுவதும் முடிவடைந்த நிலையில் தற்போது இறுதிகட்ட பணியில் மும்முரமாக இறங்கியுள்ளது படக்குழு. இதனிடையே விளம்பர பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்கள். மேலும், மாஸ்டர் படம் ஏப்ரல் மாதம் கண்டிப்பாக திரையரங்கிற்கு வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றன.

Advertisement
Advertisement