கருங்காலி மாலை குறித்து இயக்குனர் லோகேஷ் கூறி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே திரை துறையில் இருக்கும் சில முக்கிய பிரபலங்கள் கருங்காலி மாலையை அணிந்து வருகின்றனர். அதற்க்கான காரணம் என்னவென்றால் கருங்காலி மாலையை அணிந்தால் தீய சக்தி விலகி அதிர்ஷ்டம் சேரும் என்ற நம்பிக்கையில் சினிமா பிரபலங்கள் உட்பட சாதாரண மக்களும் அந்த மாலையை வாங்கி அணித்து வருகின்றனர்.

முதலில் கருங்காலி மாலை என்வென்று பார்த்தால் அது ஒரு தாவர மரம் வகையை சேர்ந்தது. இந்த மரமானது இயல்பாகவே வறட்சியை தாங்கி வளரும் ஒரு மரம். மாலையின் பூர்விகம் எதுவென்று பார்த்தால் ஆப்பிரிக்க காடுகள் என்கிறனர். இந்த கருங்காலி மரமானது கரிதன்மையை தன்னுள் சேர்த்து கொள்ளும் தன்மை வாய்ந்த மரமாக இருக்கிறது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட கரிதன்மையானது பிற்காலத்தில் தன்டாகி வைரம் பாய்ந்த மரம் போல் உறுதியாகிறது என்று கூறுவார்கள். இயற்கை சக்தியை தன்னுள் உள்வாங்கி வளரும் இந்த மரம் சரியாக பயன்படும்போது தன்னை சுற்றி உள்ள பகுதிகளை நல்ல கதிர் ஆற்றலை பரப்பி வருகிறது என்பார்கள்.

Advertisement

கருங்காலி மாலை குறித்த தகவல் :

மேலும், இது உயிருள்ள கருங்காலி, உயிரற்ற கருங்காலி என இரண்டு வகை உண்டு. உயிர் தன்மையுடைய இத்தகைய மரங்ககளை வழிபடும் போது ஸ்தல விருட்சமாக திகழும் இடங்களில் இதை வைத்து வணங்கினால் திகழும் நன்மைகள் மனிதர்களுக்கு இதனால் ஒரு காப்பு போன்ற சக்தி உருவாகிறது. ஆனால், உயிர் தன்மை இல்லாத வெட்டப்பட்ட கட்டைகளில் இத்தகைய பலன்கள் முழுவதும் கிடைக்காது. பொதுவாக தாவர நினைத்து எந்த பொருளையோ அறைத்தாலோ அழைத்தாலோ கரைத்தாலோ துலாக்கி கொதிக்க வைத்து அல்லது நெருப்பில் இட்டு இறைத்த சாம்பலாக்கி உருவாக்கிய பயன்படுத்தும் போது தான் அது முழு பயன்களும் அடைய முடியும் என்கின்றனர்.

கருங்காலி மாலை பயன்:

இதனால் சினிமா துறையில் உள்ளவர்கள், சமூக பிரபலங்கள் இதனை அணிவதால் உயர்ந்து விடலாம் என்ற எண்ணம் வருகிறது. கருங்காலி மாலை அணிவதற்கு ஜாதகம் முறைபடி யார் யார் அணி வேண்டும் அவர்கள் அணிந்தால் மட்டுமே அதன் நன்மைகள் கிட்டும். இதனால் பிரபலங்கள் இதை பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக, லோகேஷ் இதை அதிகம் பயன்படுத்துகிறார். அதோடு இந்த கருங்காலி மாலையை விற்க அவர் விளம்பரம் செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

Advertisement

இயக்குனர் லோகேஷ் பேட்டி:

இந்நிலையில் கருங்காலி மாலை குறித்து இயக்குனர் லோகேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் தொகுப்பாளர்கள் கருங்காலி மாலைக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இருப்பதாகவும், நீங்கள் தான் கருங்காலி மாலைக்கு பிராண்ட் அம்பாசிடர் என்றும் சோசியல் மீடியாவில் கூறுகிறார்கள். இது குறித்து உங்களுடைய கருத்து என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு லோகேஷ், அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. நானே இந்த கருங்காலி மாலை குறித்து லியோ படத்திற்கு பிறகு தான் நிறைய விளம்பரத்தில் பார்த்தேன். நான் இந்த மாலையை அணிதிருப்பதற்கு காரணம் ஒருமுறை ஒரு சின்ன விபத்து ஏற்பட்டது.

Advertisement

கருங்காலி மாலை குறித்து சொன்னது:

அதில் பெரிய அளவு அடி இல்லை, சின்ன காயங்கள் தான் ஏற்பட்டது. அப்போது என்னுடைய நண்பர் சதீஷ் என்பவர் இந்த மாலையை எனக்கு போட்டுவிட்டார். இது நெகட்டிவிட்டி அது வராமல் பார்த்துக் கொள்ளும் என்று போட்டுவிட்டார். அவருடைய அன்பிற்காக தான் இதை நான் போட்டு இருக்கிறேன். மற்றபடி கருங்காலி மாலையின் மீது நம்பிக்கையோ அதன் வியாபாரத்திற்கோ, விளம்பரத்திற்காகவோ நான் போடவில்லை. தேவையில்லாமல் தவறான செய்திகளை பரப்பாதீர்கள் என்று கூறியிருக்கிறார்.

Advertisement