என்றென்றும் மனதை விட்டு நீங்காத இயக்குனர் மகேந்திரனின் நாயகிகள் – வைரலாகும் புகைப்படங்கள்.

0
519
mahendran
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக இருந்தவர் மகேந்திரன். இவர் இயக்குனர் மட்டுமில்லாமல் திரைக்கதையாளர், வசனகர்த்தா, நடிகர் என பன்முகம் கொண்டு திகழ்ந்திருந்தார். 1978 ஆம் ஆண்டு வெளிவந்த முள்ளும் மலரும் என்ற படத்தின் மூலம் தான் இவர் இயக்குனராக சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதற்கு முன்பு இவர் திரைக்கதையாளர், வசனகர்த்தாவாக படங்களில் பணிபுரிந்து இருந்தார்.

-விளம்பரம்-

இவர் தெறி, நிமிர் மற்றும் பேட்டா போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்த நிலையில் நடிகர் இயக்குனர் மகேந்திரன் படங்களில் நடித்த நடிகைகளின் பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

நடிகை ஷோபா:

இவர் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். தட்டுங்கள் திறக்கப்படும் என்ற தமிழ் திரைப்படத்தில் குழந்தையின் நடிகையாக அறிமுகமாகி பின் உத்ராத ராத்திரி என்ற மலையாளத் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின் 1978-ம் ஆண்டு இயக்குனர் மகேந்திரனின் திரைக்கதை, வசனம், இயக்கத்தில் வெளிவந்த முள்ளும் மலரும் படத்தில் நடிகை சோபா நடித்து இருந்தார்.

நடிகை அஸ்வினி:

பாலகிருஷ்ணா என்ற நடிகரின் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார் அஸ்வினி. பின் இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி என பல மொழி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். 1979-ம் ஆண்டு இயக்குநர் மகேந்திரனின் இயக்கத்தில் வெளியான உதிரிப் பூக்கள் படத்தில் அஸ்வினி நடித்து இருந்தார். அதோடு இயக்குநர் மகேந்திரனின் இயக்கத்தில் வெளிவந்த சில படங்களில் அஸ்வினி நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

நடிகை ஸ்ரீதேவி :

இந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையாக இருந்தவர் ஸ்ரீதேவி. இவர் கே பாலச்சந்திரனின் மூன்று முடிச்சு படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார். அதற்கு முன்பே இவர் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்திருந்தார். பின் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கிறார். மேலும், இயக்குநர் மகேந்திரன் இயக்கத்தில் 1980-ம் ஆண்டு வெளிவந்த ஜானி திரைப்படத்தில் பாடகியாக நடித்திருந்தார் ஸ்ரீதேவி.

சுஹாசினி:

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருப்பவர் சுகாசினி. இவர் நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர் ஆவார். இவர் நடிகர் சாருஹாசனின் மகளும் ஆவார். இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். அதிலும் இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் நெஞ்சத்தைக் கிள்ளாதே. 1980-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை இயக்குநர் மகேந்திரன் இயக்கி இருந்தார்.

நடிகை ராதிகா:

தமிழ் சினிமாவில் 80, 90ஸ் கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ராதிகா. இவர் தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த் என தொடங்கி தற்போது இருக்கும் சூர்யா, விஷால், விஜய், விஜய் சேதுபதி என்று பல்வேறு நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்குறார். மேலும், இவர் சினிமாவை தாண்டி சின்னத்திரையில் கலக்கி வருகிறார். தற்போது இவர் பல படங்களில் பிசியாக நடித்து கொண்டு வருகிறார். அதில் இவர் 1982-ம் ஆண்டு இயக்குநர் மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த மெட்டி படத்தில் நடித்து இருக்கிறார். நடிகை வடிவுக்கரசியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் இந்த படத்தில் நடித்து இருந்தார்.

நடிகை ரேவதி :

தென்னிந்திய சினிமா உலகில் 80, 90 கால கட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரேவதி. இவருடைய உண்மையான பெயர் ஆஷா. இவர் 1981 ஆம் ஆண்டு பாரதிராஜாவின் “மண்வாசனை” என்ற திரைப் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் கமல், ரஜினி, விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், கார்த்திக் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். அதில் இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் 1984-ம் ஆண்டு வெளிவந்த கை கொடுக்கும் கை திரைப்படத்தில் நடிகை ரேவதி பார்வையற்ற பெண்ணாக நடித்து இருந்தார்.

Advertisement