நடிகர் விஜய் குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் பேசியிருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் பெரும்பாலும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது மட்டுமில்லாமல் வசூல் சாதனையும் செய்திருக்கிறது. அந்த வகையில் கடைசியாக விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி இருந்த ‘லியோ’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.
இதை அடுத்து தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கோட்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது இப்படத்தின் பிரமோஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இதை அடுத்து விஜய் அவர்கள் ‘தளபதி 69’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.
விஜயின் கடைசி படம்:
மேலும், இப்படத்தை எச். வினோத் இயக்க இருக்கிறார் என தெரிகிறது. இதுதான் இவருடைய கடைசி படம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் தான் இது குறித்து நடிகர் விஜய் அறிவித்திருந்தார். அதற்குப் பிறகு அவர் மும்முரமாக அரசியலில் ஈடுபட இருக்கிறார். அவர் அரசியலில் கள்மிறங்குவது அனைவருக்கும் சந்தோஷம் தான், ஆனால் தளபதி 69 படத்திற்கு பிறகு இனி நடிக்க மாட்டேன் என அவர் அறிவித்தது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மாரி செல்வராஜ் பேட்டி:
இந்நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் நடிகர் விஜய் குறித்து சமீபத்தில் பேசியுள்ளார். அதில், ‘ சிறுவயதிலிருந்தே நான் விஜயின் தீவிரமான ரசிகன். நான் நடிகர் விஜய்காக ரசிகர் மன்றம் எல்லாம் வைத்திருக்கிறேன். அவர் நடிப்பிலிருந்து விலகுவதாக அறிவிப்பார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. நடிகர் விஜய்யின் அந்த அறிவிப்பு என்னால் ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை என்று கூறியுள்ளார்.
மாரி செல்வராஜ் குறித்து:
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக மாரி செல்வராஜ் திகழ்கிறார். இவர் ‘ பரியேறும் பெருமாள்’ என்ற படத்தின் மூலம்தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் கர்ணன், மாமன்னன் போன்ற படங்களை இயக்கி இருந்தார். இவர் இயக்கிய எல்லா படங்களும் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது மாரி செல்வராஜ் இயக்கி தயாரித்து இருக்கும் படம் ‘வாழை’.
வாழை படம்:
முழுக்க முழுக்க குழந்தைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். சந்தோஷ் நாராயணன் தான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படத்திற்கான ப்ரொமோஷன் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.