திருமாவளவனை புகழ்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் பின் 2018ல் வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாரி செல்வராஜ் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றதோடு மட்டும் இல்லாமல் பல்வேறு விருதுகளையும் பெற்றது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘கர்ணன்’. இந்த படமும் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து கடந்த ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் வெளிவந்த படம் மாமன்னன். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வைகை புயல் வடிவேலு , பகத் பாசில், லால் போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளத்தையும், அரசியலையும் ஆதிக்க வர்க்கத்தினர் எப்படி பயன்படுத்தி கொள்வார்கள் என்பதை கூறி இருக்கிறது.

Advertisement

மாரி செல்வராஜ் திரைப்பயணம்:

இந்த படத்தை பார்த்து முதல்வர் மு. க. ஸ்டாலின், ரஜினிகாந்த், கமலஹாசன், தனுஷ் உட்பட பல பிரபலங்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இதை அடுத்து தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் வாழை. இந்த படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதை அடுத்து இவர் துரு விக்ரமை வைத்து படம் இயக்குகிறார். இந்த படத்தினுடைய படப்பிடிப்பும் கூடிய விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழர் இலக்கிய விருதுகள் வழங்கும் விழா:

இப்படி அவருடைய படங்கள் மட்டும் இல்லாமல் அவருடைய பேச்சுக்களுமே ரசிகர்கள் மத்தியில் அதிக அளவு கவனத்தை ஈர்க்கும். அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக எழுச்சி தமிழர் இலக்கிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் மாரி செல்வராஜூக்கு மாமன்னன் படத்திற்காக எழுச்சித்தமிழர் என்ற விருது வழங்கப்பட்டது. இதனை அடுத்து விழாவில் மாரி செல்வராஜ், விருது வாங்கிய அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். நான் சினிமாவில் நுழைந்தபோது பாரதிராஜா சார் கையில் முதன்முதலாக விருது வாங்கினேன்.

Advertisement

விழாவில் மாரி செல்வராஜ் சொன்னது:

அந்த விருதை வாங்கும் போது எப்படி நடந்து கொள்ளணும்? எப்படி பேசணும்? என்று கூட எனக்கு தெரியாது. அந்த மனநிலையில் இருந்தேன். அந்த விருதை வாங்கி விட்டு நான் திரும்பும் போது திருமா அண்ணன் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்த உடனே அவரிடம் இந்த விருதை கொடுத்து விட்டேன். அவர் கையில் இருந்து அந்த விருதை வாங்கும் தருணம் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியாக இருந்தது. என்னுடைய வாழ்க்கையில் பொன்னான, மறக்க முடியாத நாள் என்றால் அதுதான். அதேபோல் ஒரு படத்திற்கான காட்சி எழுதும்போது, எந்த இடத்தில் கோபப்படுகிறேன், உணர்ச்சிவசப்படுகிறேன் என்பது எனக்கே நன்றாக தெரியும்.
ஆனால், அதை எப்படி படம் ஆக்குவது? என்னால் அது முடியுமா? என்ற கேள்விகள் எனக்குள்ளும் உண்டு.

Advertisement

திருமா குறித்து சொன்னது:

பரியேறும் பெருமாள் படத்தில் அப்பா ஓடிவரும் காட்சி, கர்ணன் படத்தில் பேருந்து உடைக்கும் காட்சி, மாமன்னன் படத்தின் இடைவெளி காட்சி போன்றவற்றையெல்லாம் சொல்லலாம். எழுதும் போது இந்த காட்சிகள் எல்லாம் சென்சார் அனுமதிக்குமா? ரசிகர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? என்றெல்லாம் பல கேள்விகள் எனக்குள் எழும். அப்படி நான் யோசிக்கும்போதெல்லாம் திருமா அண்ணன் வீடியோக்களை தான் எடுத்து பார்ப்பேன். என்னுடைய கோபத்தை விட அவருடைய கோபம் அதிகமாக இருக்கும். அந்த கோபத்தை தாண்டி நிதானமும் இருக்கும். அதை தான் நான் கற்றுக் கொள்ள முயற்சி செய்து வருகிறேன். ஒவ்வொரு முறையும் அவருடைய பேச்சைக் கேட்டு தான் நான் படம் எடுக்குகிறேன் என்று கூறி இருக்கிறார்.

Advertisement