திரௌபதி வந்தப்ப அப்படி சொன்னாங்க இப்போ PSக்கு இப்படி சொல்றாங்க, என் பகாசுரன் மட்டும் வரட்டும் – மோகன் ஜி காரசாரா சவால்.

0
387
mohan
- Advertisement -

பொன்னியின் செல்வன் படம் பலருக்கும் பயத்தை உருவாக்கியிருக்கிறது என்று இயக்குனர் மோகன் ஜி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல பேரின் கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை தற்போது திரைப்படமாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது. மேலும், தமிழ் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் உலக சினிமா ரசிகர்களும் பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

-விளம்பரம்-

இது ஒரு பக்கம் இருக்க, பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவானதில் இருந்தே ராஜராஜ சோழன் பற்றிய கருத்துக்களும், அவர் எந்த மதத்தை சார்ந்தவர் போன்ற விவாதங்களும் சமூக வலைதளத்தில் அடிக்கடி நடந்து கொண்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் விழா ஒன்றில் வெற்றிமாறன், வள்ளுவருக்கு காவி உடை கொடுக்கப்படுவதாக இருக்கட்டும், ராஜராஜ சோழன் ஒரு இந்து அரசனாக்குவது இருக்கட்டும் என்று பல அடையாளங்களை நம்மிடம் இருந்து எடுத்துக் கொண்டு வருகிறார்கள். இது சினிமாவிலும் நடக்கும். சினிமாவிடம் இப்படி தொடர்ந்து அடையாளங்களை எடுக்கிறார்கள்.

- Advertisement -

ராஜராஜசோழன் மதம் குறித்த சர்ச்சை:

இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம் போராட வேண்டும் என்று பேசி இருந்தார். வெற்றிமாறனின் இந்த பேச்சு சமூக வலைதளத்தில் தற்போது விவாதம் ஆகியிருக்கிறது. சொல்லப்போனால், தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்கே ராஜராஜ சோழன் இந்துவா? என்ற கேள்வி தான். இதுகுறித்து பல பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இது குறித்து இயக்குனர் மோகன் ஜி அளித்திருக்கும் பேட்டி வைரலாகி வருகிறது.

மோகன் ஜி அளித்த பேட்டி:

அதாவது, ஓங்காரம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரசாத் ஸ்டுடியோவில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் மோகன் ஜி கூறியது, இதற்கு முன்பு தமிழக மக்களுக்கு வரலாறு குறித்து பெரிய ஆர்வம் இருந்ததில்லை. பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு தான் சோழர்கள், சேரர்கள் பாண்டியர்கள் குறித்து அறிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டு இருக்கிறது. அதோடு சிலருக்கு இது பயத்தையும் உருவாக்கி இருக்கிறது. காரணம், இதற்கு முன்பு வரலாறு குறித்து யாரும் அறிந்து கொள்ள ஆர்வம் காட்டியதில்லை. தற்போது இந்த வரலாறு குறித்து தெரிந்து கொள்ள ஆர்வம் வந்ததால் பலராக பிரிந்திருக்கும் மக்கள் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்ற அச்சம் நிலவி இருக்கிறது.

-விளம்பரம்-

இந்து மதம் குறித்து சொன்னது:

பொன்னியின் செல்வன் அதை நிகழ்த்தி காட்டி இருக்கிறது. இதனால் தான் தற்போது சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் உருவாகி வருகிறது. இந்து அறநிலையத்துறை என்று பெயர் வைக்க கூடாது என்று கூறி இருக்கிறார்கள். அது தமிழக அரசின் முடிவு. அதனை யாரும் மாற்ற முடியாது. இந்து மதம் அல்ல, நெறி. அது ஒரு வாழ்வியல் முறை. அதை யாரும் சுருக்கி விட முடியாது. இந்து மதம் இல்லை என்று யாராலும் சொல்லி விட முடியாது. ராஜராஜ சோழனை ஒரு மதமாக சுருக்கி பார்க்க முடியாது.

வைரலாகும் மோகன் ஜி கருத்து:

அவரை வெறும் சைவம் எனக் கூறினால் அதற்கான ஆதாரத்தை கொடுக்க வேண்டும். சங்க காலத்தில் இந்து என்ற பெயர் இருந்துள்ளது. அதற்கான ஆதாரத்தை வேண்டுமானால் நான் வாட்ஸ் அப்பில் அனுப்புகிறேன். திரௌபதி படத்தின் வெற்றிக்கு பிறகு வலதுசாரி, நடுநிலை என மக்கள் மத்தியில் பேச்சுகள் ஆரம்பித்துவிட்டது. தற்போது சேரர்கள், பாண்டியர்கள், சோழர்கள் என வரலாறு பக்கம் திரும்பி விட்டார்கள். அதேபோல் பகாசுரன் படம் தமிழ் சினிமாவில் பெரிய விவாதத்தை கிளப்பும் என்று கூறி இருந்தார்.

Advertisement