உங்க அப்பாவும் நீங்களும் இதான் பண்ணி இருப்பீங்க, அதான் உங்களுக்கு கத சொல்லல – மிஸ்கினின் நக்கலை பாருங்க.

0
18527
Myskkin
- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனர்களாக ஜொலித்து வரும் எத்தனையோ பேர் ஆரம்பத்தில் துணை இயக்குனர்களாக பணிபுரிந்தவர்கள் தான். அந்த வகையில் இயக்குனர் மிஷ்கினும் ஒருவர். இயக்குனர் மிஸ்கின் திரைப்பட இயக்குநர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் முதலில் இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அவர் இயக்கிய யூத் படத்தில் கூட சிறு காட்சியில் மொட்டை தலையுடன் வந்திருப்பார். பின் இவர் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன் என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி உள்ளார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is my.jpg

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மிஸ்கின், விஜய் குறித்து பேசியதாவது, நான் இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் உதவி இயக்குனராக இருந்தபோது ஆறுமாதம் விஜயிடம் நான் எதுவுமே பேசவில்லை. பின்னர் ஆறு மாதம் கழித்து என் கழுத்துக்கு பின்னால் என் கழுத்தை பிடித்து ஏன் அண்ணா என்னிடம் பேசவே மாட்டேங்கிறீங்க என்று கேட்டார். அதற்கு நான் உங்களை நான் ஒரு கதையோடு தான் சந்தித்து பேசவேண்டும் என்று கூறினேன்.

இதையும் பாருங்க : சன் மியூசிக் Vjவை திருமணம் செய்த மகேஷின் மகளா இது – எப்படி வளந்துட்டார் பாருங்க.

- Advertisement -

அதன் பின்னர் நான் சித்திரம் பேசுதடி படத்தை எடுத்து முடித்து விட்டு விஜய்க்கு அதை போட்டுக் காண்பித்தேன். அப்போது லிப்டில் சென்று கொண்டிருக்கும்போது இந்த கதை உங்களுக்காக தான் முதலில் எழுதினேன் என்று கூறினேன். அதற்கு விஜய் என் கழுத்தை பிடித்து இழுத்து என்னை லிப்டில் தள்ளி இந்த கதையை ஏன் எனக்கு சொல்லவில்லை என்று கூறினார்.

அதற்கு நான், உங்க அப்பா ஒரு 18 சீன் மாத்தி இருப்பாரு, நீங்க ஒரு 18 சீன் மாத்தி இருப்பீங்க. நான் தற்கொலையே பண்ணி இருப்பேன் அதனால் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அதன் பின்னர் நான் வெவ்வேறு படங்களை இயக்க ஆரம்பித்து விட்டேன். . கமல் சாரை மனதில் வைத்து எழுதிய கதையை விஜய்க்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அந்த கதை ஒரு பௌத்தாரை பற்றிய கதை அது மிகவும் வரலாற்று சிறப்புமிக்க கதையாக இருக்கும். இப்போது இல்லை என்றாலும் இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் விஜய்க்கு அந்த கதையை சொல்வேன்

-விளம்பரம்-
Advertisement