ஐடியாவே இல்லை, அவரே வந்து மாட்டிகிட்டாரு – விருது மேடையில் இப்படியா உண்மைய சொல்வது நெல்சன்.

0
701
Nelson
- Advertisement -

அவரை வைத்து படம் பண்ண ஐடியாவே இல்லை, அவரே வந்து மாட்டிக்கொண்டார் என்று நெல்சன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக நெல்சன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு இயக்குனராக அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்று படத்தை இயக்கி இருந்தார்.இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு சிவகார்த்திகேயனின் வெற்றிப்படமாக டாக்டர் படம் அமைந்திருக்கிறது. இந்த படத்தில் பிரியங்கா, அர்ச்சனா, யோகிபாபு என பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தை கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து எஸ்.கே.புரொடக்‌ஷனும் தயாரித்து இருந்தார்கள்.

- Advertisement -

நெல்சன் இயக்கிய படங்கள்:

இந்த படத்தில் ஆக்ஷனுக்கு இணையாக காமெடி காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதனால் இந்த டாக்டர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது படமாக நெல்சன் அவர்கள் விஜய்யை வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

ஜெயிலர் படம்:

இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து தற்போது நெல்சன், ரஜினியை வைத்து ஜெயிலர் படம் பண்ணுகிறார். இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. மேலும், இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த் உட்பட பலரும் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

நெல்சன் அளித்த பேட்டி:

தற்போது இந்த படத்தின் பணிகள் மும்முரமாக சென்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நெல்சன் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், சிவகார்த்திகேயன் ஒருநாள் எனக்கு போன் பண்ணி படம் பண்ணலாமா? என்று கேட்டார். நானும் சரி என்று சொன்னேன். ஆனால், அவர் என்னிடம் பேசும் வரை எனக்கு எந்த ஐடியாவும் இல்லை. சிவகார்த்திகேயனே வந்து மாட்டிக்கொண்டார். இந்த கதையை வேறு யாரிடமாவது சொல்லி அதை பண்ண வைக்க முடியுமா? என்று எனக்கு தெரியாது. அவ்வளவு சீக்கிரம் அந்த கதை யாருக்குமே புரியாது.

jailer

ரஜினி குறித்து சொன்னது:

படமாக எடுத்துக்காட்டினால் தான் தெரியும். ஆனால், சிவகார்த்திகேயன் நீங்க என்ன வேண்டுமானாலும் பண்ணிக்கோங்க என்று சொன்னார். சரி எல்லாம் முடித்துவிட்டு இதுதான் கதை என்று முடிவு செய்த பிறகு இது எப்படி இருக்கும் என்று சந்தேகம் ஆரம்பத்தில் எனக்கு இருந்தது. படமும் நல்லா போனது. எதிர்பார்க்காத வெற்றி. மேலும், ரஜினி சாரை வைத்து ஜெயிலர் படம் எடுத்துக் கொண்டிருக்கிறேன். தற்போது ரஜினி சாரோட பகுதி எல்லாமே முடிந்து விட்டது. ஜெயிலர் படத்தில் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்குமே நன்றி என்று கூறியிருந்தார்.

Advertisement