விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள சர்கார் படத்திற்கு அரசியல் கட்சியின் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள சில சர்ச்சையான காட்சிகளை நீக்க வேண்டும் என்று அதிமுக கட்சியினர் பல்வேறு பகுதிகலில் போராட்டத்தில் நேற்று(நவம்பர் 8) துவங்கினர்.

Advertisement

இதையடுத்து சர்கார் படத்தில் இடம்பெற்ற சில சர்ச்சைக்குரிய காட்சிகளை தணிக்கை குழுவிடம் அனுமதி பெற்று நீக்கிவிடுவதாக சர்கார் படக்குழுவினர் ஒப்புக்கொண்டனர். இருப்பினும் அதிமுகவினர் சர்கார் படத்தை எதிர்த்து போராட்டங்களை நடத்தி வந்தனர்.

தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு,அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல் என்று ரஜினி,கமல், விஷால் என்று பல்வேறு நடிகர்களும் சர்கார் படத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் இயக்குனர் பா. ரஞ்சித்தும் சர்கார் படத்திற்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார்.

Advertisement

Advertisement

இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், #சர்கார் விமர்சனத்தை எதிர்க்க அரசதிகாரத்தையும், வன்முறையையும் கையாளுபவர்களுக்கு தெரிந்தே இருக்கிறது, இந்த நாட்டில் என்றோ “ஜனநாயகம்” அழிந்து/இழந்து போய்விட்டது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ரஞ்சித்.

Advertisement