தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. போராட்டத்தின் 100 வது நாளான, கடந்த  22-ஆம் தேதி செவ்வாய் கிழமை அன்று போராட்டம் வலுத்தது, அந்த போராட்டத்தில் 13 பேரை போலீசார் சுட்டுக் கொன்றனர். போலீசாரின் இந்த வன்முறையை கண்டித்து பல்வேறு தரப்பினரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் நேற்று(மே 26)தமிழ்நாடு கலை இயக்கிய ஊடக செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சார்பாக, தமிழ் சினிமா துறை கலைஞசர்கள் போராட்டம் ஒன்றை நடத்தினர். இந்த போராட்டத்தில் பல்வேறு சினிமா கலைஞசர்கள் பங்குபெற்றனர். இதில் பங்குபெற்ற இயக்குனர் பாண்டிராஜ் சீமானையும், ஸ்டாலினையும் சூடுவீர்களா என்று மிகவும் ஆக்ரோஷமாக கூறியுள்ளார்.

இந்த போராட்டத்தில் பேசிய இயக்குனர் பாண்டிராஜ் தமிழத்தில் உள்ள ஆட்சியை பார்த்தல் எங்களுக்கு கோபம் தான் வருகிறது. பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் எப்படி தங்களது விடுமுறை நாட்களை காலண்டரில் எண்ணி எதிர்ப்ர்த்துக் கொண்டிருப்பானோ, அப்படி தான் உங்களது ஆட்சி காலத்தின் முடிவை எதிர் பார்த்து வருகிறோம்.

Advertisement

Advertisement

உங்களை எதிர்த்து யாராவது கேள்வி கேட்டால் அவர்களை சுட்டுக் கொள்வீர்களா. அப்படியென்றால் உங்களை அடிக்கடி கேள்விகேட்டு எதிர்த்து வரும் சீமான் அண்ணனையும், தி.மு.க வின் ஸ்டாலின் சாரையும் கூட நீங்கள் சுட தயங்கமாடீர்கள் “என்று மிகவும் ஆக்ரோஷத்துடன் பேசியுள்ளார் இயக்குனர் பாண்டியராஜன்.

Advertisement