தமிழ் சினிமவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர். சமீப காலமாக நடிகர் விஜய்யின் படங்களில் அரசியல் பிரச்சனைகள் நடந்து வருவது தொடர்கதை ஆகி வருகிறது. அதை போல நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜய்யின் அரசியல் நிலைப்பாட்டை குறித்து பிரபல நடிகரும் இயக்குனருமான பார்த்தீபன் கூறியுளளார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பார்த்திபனிடம் ‘கமல் அரசியலுக்கு வந்துட்டார். ரஜினி வரப்போறேன்னு சொல்றார். விஜய், விஷால் எல்லோருக்கும் அரசியல் ஆசை இருகிறது. உங்களுக்கும் இருக்கா ? எந்த கட்சியில் சேருவீர்கள்’ என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த பார்த்திபன் ‘சினிமாவைப் போல இந்த அரசியல் சாதாரணமானது கிடையாது. சமீபத்தில் கூட நடிகர் விஜய் எஸ் பி பி யின் இறங்களுக்கு சென்றபோது அங்கே கீழே இருந்த ஒரு செருப்பை எடுத்துக் கொடுத்தார். அதை வைத்து ஒத்த செருப்பு படத்தோடு ஒப்பிட்டு பல மீம்கள் கூட போட்டார்கள்.
அப்போது வேறு ஒரு விமர்சகர் செல்கிறார் நாளை விஜய் அரசியலுக்கு வருவதற்காக தான் இந்த நிகழ்விற்கு போனார் என்று சொன்னதும் எனக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. நாளை என்றோ ஒருநாள் முதலமைச்சராக வரவேண்டும் என்பதற்காக ஒருவர் ஒரு வருத்தமான நிகழ்ச்சிக்கு சென்று வருவார்களா ? அரசியலுக்காக அப்படி ஒரு டிராமா செய்ய வேண்டுமா? அதனால் என்ன லாபம்.
தற்போது இருக்கும் ஒரு கட்சிக்குள்ளேயே அடுத்த முதல்வர் யார் என்ற பிரச்சினை உருவாகி கொண்டிருக்கிறது. இப்படி விவாதிப்பதற்கான களமாக மட்டுமே அரசியல் தற்போது இருக்கிறது. இந்தப் பிரச்சினைகளுக்கு நடுவே மக்களின் பிரச்சனையை யார் பேசுவார்கள்? எப்படி பேசுவார்கள்? என்பது தான் எனக்கு தேவை. யார் முதல்வராக ஆனால் என்ன யார் இரண்டாம் முதல்வர் ஆனால் என்ன’ என்று கூறியுள்ளார்.