இலக்கிய சலங்கை துரை இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கடத்தல். இப்படத்தில் பி.என்.ஆர் கிரியேஷன் மற்றும் பிரைம் அசோசியேட்ஸ் மற்றும் பிரைம் அசோசியேட்ஸ் இணைத்து இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் கதாநாயகன் எம்.ஆர். தாமோதர் மற்றும் கதாயநாயன் விதிஷா, ரியா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் துணை கதாபாத்திரங்களாக சிங்கம் புலி, நிலைகள் ரவி, சுதா, தமிழ் வாணன், ரவிகாந்த், மோகன் ரெட்டி, மாஸ்டர் தருண, சந்தோஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படம் வரும் ஜூலை மாதம் வெளியாகிறது. இந்நிலையில் தான் இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் இயக்குனர் பேரரசு, ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொன்றனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பேரரசு கூறுகையில் கடத்தல் என்பது என்ன ,ஆள் கடத்தலா? எம்.எல்.ஏ கடத்தலா? உலககிலேயே பெரிய கடத்தல் என்றால் அது நாள் கடத்தல் தான்.

Advertisement

நாம் அனைவரும் நாட்களை கடத்திக்கொண்டிருக்கிறோம். சில படங்களில் தலைப்புகளை எப்படி வைக்கிறார்கள் என்று தோன்றுமப்படியான டைட்டில் இந்த கடத்தல் படம். சில படங்களுக்கு அதிக விளம்பரம் செய்வார்கள். அவர்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு விளம்பரம் செய்து ஆட்களை வர வைக்கின்றனர்.

ஆனால் செல்வாக்குள்ள படங்கள் எத்தனை காலம் ஆனாலும் அந்த படத்தின் பெயரையும் காட்சிகளை அப்படியே கூறுவார்கள். படத்தில் நாம் நம்முடைய வலியை கூறலாம். ஆனால் அதனை மக்கள் தங்களுடைய வாழ்க்கையுடன் காண்ட் செய்து பார்க்க வேண்டுமே தவிர அவர்களுக்கு வலியை தரக்கூடாது. சில நேரங்களில் மக்கள் படம் ஏன் இப்படி இருக்கிறது என்பார்கள். ஆனால் சில நேரங்களில் என்ன சார் படமெடுக்குறீகள் என்று கேட்பார்கள். அதுதான் மிகப்பெரிய வலி.

Advertisement

சினிமா துறையை பொறுத்தவரையில் தாழ்த்தப்பட்டவன் என்று யாரும் கிடையாது. இதில் இரண்டே சாதி தான் ஓன்று ஜொலித்தவன், ஜொலிக்கபோகிறவன். தாழ்த்தப்பட்டவன் என்ற சொல்லே வலிக்கிறது. இசை மேதை ஜீனியஸ் தாழ்த்தப்பட்டவர் தான். அவருடைய காலில் பலர் விழுந்து வணங்கவில்லையா? சினிமாவில் ஜாதியை பார்க்க மாட்டார்கள். என்னை உதவியாளராக சேர்க்கும் போது என்ன ஜாதி என்று கேட்கவில்லை.

Advertisement

நடிகர் விஜய் எனக்கு வாய்ப்பு கொடுத்த போது என்னிடம் சாதி என்னவென்று கேட்க்கவில்லை. வாய்ப்புகளை கேட்டு வருபவரிடம் ஜாதி கேட்பவர் இயக்குனரே கிடையாது. ஜாதி, சிறுபன்மையினர் போன்றவற்றையெல்லாம் இதில் கலக்காதீர்கள். அப்படியில்லை என்றால் கவுண்டர் மகன், தேவை மகன் என்று படங்கள் வரும். ஜாதிபடம் வந்து சாதிப்பெருமை பற்றி பேசட்டும். ஆனால் மற்றவர்களின் ஜாதியை குறை சொல்லி பிரச்சனையை கிளப்பாதீர்கள். சினிமாவில் ஜாதியை கலக்க வேண்டாம் என்று கூறினார்

Advertisement