சினிமாவில் அறிமுகமாகும் பிரபு சாலமனின் வாரிசு – வெளியான பட பூஜை புகைப்படம்.

0
1191
prabhu
- Advertisement -

பாலிவுட்டை போல தமிழ் சினிமாவிலும் எண்ணற்ற வாரிசு நடிகர் நடிகைகள் இருக்கிறார்கள். விஜய், சூர்யா துவங்கி அதர்வா கௌதம் கார்த்திக் வரை எண்ணற்ற வாரிசு நடிகர்கள் இருக்கிறார்கள் அந்த வகையில் பிரபல இயக்குனர் பிரபு சாலமனும் தனது வாரிசை சினிமா உலகிற்கு அறிமுகம் செய்ய இருக்கிறார். தமிழ் சினிமாவில் வித்யாசமான மற்றும் தரமான படங்களை கொடுத்து தனக்கென்று ஒரு தனி அங்கீகாரத்தை பதித்தவர் இயக்குனர் பிரபு சாலமன். இவர் இயக்கிய மைனா, கும்கி போன்ற படங்கள் இவருக்கு பல விருதுகளை வாங்கி தந்தது.

-விளம்பரம்-

பிரபு சாலமனை விட சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமடைந்தது அவரது மகள் என்று தான் சொல்ல வேண்டும். கடந்த ஆண்டு தடை செய்யப்பட்ட டிக் டாக் செயலி மூலம் பிரபலமடைந்தவர்கள் பல பேர் இருக்கின்றனர். அந்த வகையில் பிகில் படத்தில் இடம்பெற்ற வெறித்தனம் பாடலை டிக் டாக் செய்து பிரபலமடைந்தவர் பிரபு சாலமனின் மகள் ஹேசல் ஷைனி.ஹேசல் ஷைனி சமூக ஊடக தளமான டிக் டா க்கில் பிரபலமானவர். இவர் பிரபல இயக்குனர் பிரபு சாலமனின் மகள் என்பதே பலருக்கும் பின்னர் தான் தெரியவந்தது.

- Advertisement -

டிக் டா க்கில் 14 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்களை கொண்டு இருந்தனர். டிக் டோக் மூலம் கிடைத்த பிரபலத்தால் இவருக்கு யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற பிற தளங்களில் அதிக பின்தொடர்பவர்களைப் பெற்றத்தந்தது. இப்படி ஒரு நிலையில் தனது மகளை பிரபு சாலமன் சினிமாவில் அறிமுகம் செய்வார் என்று கூறப்பட்டது. ஆனால், அதனை மறுத்தார் பிரபு சாலமன்.

மேலும், தனது மகள் வீடியோ பதிவிடுவது தனக்கு பிடிக்கவில்லை ஆனால், அவள் கேட்பது இல்லை என்று கூறி இருந்தார், இப்படி ஒரு நிலையில் பிரபு சாலமனின் மகன் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். தகப்பா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.சஞ்சய்க்கு ஜோடியாக ஆராதனா என்பவர் நடிக்கிறார். கௌசிக் ஸ்ரீபுகார் என்பவர் படத்தினை இயக்குகிறார். இந்த படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடைபெற்றது.

-விளம்பரம்-
Advertisement