வாடிவாசல் படம் தொடர்பாக வெற்றிமாறனுக்கு இயக்குனர் பிரவீன் காந்தி விடுத்து இருக்கும் சவால் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவருடைய படைப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதிலும் தனுஷ்-வெற்றிமாறன் காம்போ வேற லெவல். இவர்கள் இருவரின் கூட்டணியில் வந்த படங்கள் எல்லாம் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து இருக்கிறது.
மேலும், கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் விடுதலை. இந்த படத்தில் கதாநாயகனாக சூரி நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி படத்தில் போராளியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்த படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் உருவாகியிருக்கிறார்.
வெற்றிமாறன் குறித்த தகவல்:
இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருக்கிறார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி இருந்தார்கள். இதனைத் தொடர்ந்து தற்போது வெற்றிமாறன் அவர்கள் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். தற்போது இந்த படத்திற்கான இறுதி கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது.
வாடிவாசல் படம்:
இந்த பாகத்தில் மஞ்சு வாரியார் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இவர் சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற படத்தை எடுக்கிறார். எழுத்தாளர் சி சு செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்ற நாவலை மையமாக வைத்து தான் இந்த படத்தை வெற்றிமாறன் எடுக்கிறார். இதில் அமீர் உட்பட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.
படம் குறித்த தகவல்:
இந்த படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டு வருகிறது. மேலும், தமிழ்நாடு முழுவதுமே காளைகளை வரவழைத்து டெஸ்ட் ஷூட்டிங் நடத்தி இருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. இப்படி இருக்கும் நிலையில் இயக்குனர் பிரவீன் காந்தி வெற்றிமாறன் பற்றி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், ஜோடி படத்திலேயே நான் நாடக காதல் குறித்து பேசி இருப்பேன்.
வெற்றிமாறனுக்கு விட்ட சவால்:
சினிமா வேண்டாம் என்று நான் ஒதுங்கி இருக்கிறேன்.என்னிடம் ஜல்லிக்கட்டு பற்றி ஒரு ஸ்கிரிப்ட் இருக்கிறது. அந்த ஸ்கிரிப்டில் அத்தனை வேலைகளும் முடித்து விட்டேன். கடந்த ஆண்டு வெற்றிமாறனுக்கு இந்த கதை தொடர்பாக நான் மெசேஜ் செய்தேன். ஆனால், அவரிடமிருந்து எந்த ரெஸ்பான்ஸ் வரவில்லை. நான் வைத்திருக்கும் ஜல்லிக்கட்டு தொடர்பான ஸ்கிரிப்ட் அருமையாக இருக்கும். என்னை ரொம்ப உசுப்பி விட்டால் வாடிவாசல் போட்டியாக அதை எடுத்து வாடி ஆடி பார்த்திடலாம் என்று வெற்றிமாறனுக்கு சேலஞ்ச் செய்கிறேன் என்று கூறி இருக்கிறார்.