பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி மகனுக்கு திருமணம்.! மணமகள் இவர்தான்.! அவரே வெளியிட்ட புகைப்படம்.!

0
86
Rajamouli
- Advertisement -

தெலுகு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்றழைக்கபடும் எஸ் எஸ் ராஜமௌலியின் மகன் எஸ் எஸ் கார்திகேயாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. பிரபல தெலுங்கு பட கதாநாயகர் ஜகபதி பாபுவின் தங்கை மகள் பூஜா என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான எஸ் எஸ் ராஜமௌலி தெலுங்கில் மஹதீரா, பாகுபலி போன்ற பிரமாண்ட படங்களை எடுத்துள்ளார். இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி, ராமா என்பவரை திருமணம் செய்துகொண்டார். மேலும், ராஜமௌலிக்கு கார்த்திகேயா என்ற மகனும், மயூகா என்ற மகளும் இருக்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் ராஜமெளலியின் மகன் எஸ்.எஸ் கார்த்திகேயாவுக்கும்,பிரபல தயாரிப்பாளர் ராம் பிரசாத்தின் மகள் பூஜா என்பருக்கும் இரு தினங்களுக்கு முன் திருமண நிச்சயதார்தம் நடைபெற்றுள்ளது. மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமண நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள ராஜமௌலியின் மகன் கார்த்திகேயா , வாழ்க்கையின் ஒரு புது தடத்தில் செல்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.உங்களது அன்பு மழைக்கு என்னுடைய நன்றிகள் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement