நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் பல்வேறு பிரபலங்களையும் இந்த கொடிய வைரஸ் விட்டுவைக்கவில்லை. அதே போல தமிழ் சினிமாவில் சூர்யா, விஷால், அதர்வா, ஆண்ட்ரியா, சரத் குமார், சுந்தர் சி என்று பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமாகினார். அதே போல கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல சினிமா பிரபலங்கள் உயிரிழந்தனர் .
பின்னணி பாடகர் எஸ்பிபி, இயக்குனர் தாமிரா, இயக்குநர் கே. வி ஆனந்த், காமெடி நடிகர் பாண்டு, நடிகர் மாறன், ஜோக்கர் துளசி, ஆட்டோகிராப் கோமகன், இயக்குனர் அருண்ராஜா காமராஜ் மனைவி சிந்து உள்ளிட்ட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இப்படி ஒரு நிலையில் மாஸ்டர் படத்தில் நடித்த இயக்குனர் ரத்னகுமார் வீட்டில் கொரோனாவால் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் பாருங்க : 42 வயதிலும் நீச்சல் உடையில் வளைத்து வளைத்து புகைப்படங்களை வெளியிட்ட நடிகை பூமிகா.
ரத்னகுமார் வேறு யாரும் இல்லை தமிழில் அமலா பால் நடிப்பில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ‘ஆடை’ படத்தை இயக்கியவர் தான். ஆடை படத்திற்கு முன்னர் இவர் பெஞ் டாலகிஸ், மேயாத மான் போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். அதே போல மாஸ்டர் திரைப்படத்தில் எழுத்தாளராக பணியாற்றிதோடு அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் லோகேஷ் கனகராஜுடன் நடித்து இருப்பார். இப்படி ஒரு நிலையில் இவரது குடும்பத்தை சேர்த்தவர்கள் கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளனர்.
இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், தமிழில் மிகவும் 15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை என் குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கும் கொரோனா. அப்பா, பாட்டி, தம்பியின் மனைவி, என் மாமியார் என சிலர் Hospitalize செய்யப்பட்டு தேரினர். கடந்த 20 நாட்களாக நேர்ந்த பல மன உளைச்சல்களை கடந்து இன்று மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பியது வீடு என்று பதிவிடுள்ளார்.