‘வீர தீர சூரன்’ படம் குறித்து இயக்குனர் கூறியிருக்கும் சுவாரசியமான தகவல்கள் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பல ஆண்டு காலமாக தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சியான் விக்ரம். கடைசியாக நடிகர் விக்ரம் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் கேஜிஎஃப் இல் இருந்த பூர்வ குடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாகி இருந்தது.
இந்தப் படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்கிரோன் என பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார். கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும். தற்போது விக்ரம் அவர்கள் ‘வீர தீர சூரன்- பார்ட் 2’ என்னும் படத்தில் நடித்திருக்கிறார்.
வீர தீர சூரன்:
இப்படத்தை முன்னணி நட்சத்திர இயக்குனரான எஸ். யூ. அருண்குமார் இயக்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா போன்ற வெற்றி படங்களை இயக்கியவர். இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து, எஸ் ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன், சித்திக் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். மேலும், இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
படம் குறித்த தகவல்:
ஆக்சன் திரில்லர் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரித்திருக்கிறார். தற்போது ‘வீரதீர சூரன் பார்ட் 2’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த திரைப்படம் வருகின்ற 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகும் என கூறப்படுகிறது.
பார்ட் 2 முதலில் ஏன்:
இந்நிலையில் படத்தின் இயக்குனர் எஸ்.யூ .அருண்குமார், பார்ட் 1 எடுப்பதற்கு முன் பார்ட் 2 எடுத்ததற்கான காரணத்தை ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில், ‘ரொம்ப கம்மியான காட்சிகளை வைத்து தான் பண்ணனும். 60, 62 சீன் எல்லாம் பண்ண கூடாது. 10 சீன், 15 சீன்தான் தான் இருக்கணும் படத்துல என்று பண்ண படம் தான் ‘வீர தீர சூரன்’. படத்தோட நீளத்துக்கும் இதற்கும் சம்மந்தமும் எல்லை. ஒவ்வொரு காட்சியும் 5-7 நிமிடங்கள் என்று இருக்கும். நம்ம சினிமாவுக்கு வரும்போது நிறைய விஷயம் சொல்லி சொல்லி அனுப்புவாங்க ஒரு படத்துல 62 சீன் இருக்கணும்.
இயக்குனர் சொன்ன சீக்ரெட்:
ஸ்கிரிப்ட் என்றால் 120 பக்கம் இருக்க வேண்டும், 3- act Structure குள்ள வரணும் இல்லன்னா 15 Beat sheet குள்ள வரணும் இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் சொல்லுவாங்க. அப்புறமா நம்ம பிராக்டிகலா எக்ஸ்பிரியன்ஸ் பண்ணா இதெல்லாம் தேவையில்லை என்று தோணும். அதை பிரேக் பண்ண வேண்டும் என்று தோணுச்சு. அதுதான் ‘வீர தீர சூரன் பார்ட் 2’. ஏனென்றால், இந்தப் படம் பட்டுனு ஆரம்பிச்சிடும். ஒரு மோதலோடு ஆரம்பிக்கும். அதனால் கண்டிப்பாக முன்னாடி ஒரு கதை இருக்கிறது. அதுதான் பார்ட் 1. அதனால் பார்ட் 1 வரும், ஆனால் இப்ப பார்ட் 2 தான் எடுத்து இருக்கோம் என்று கூறியுள்ளார்.