கருத்து சொல்லி நான் கோடி கோடியாவா சம்பாதிச்சேன். ஆனாலும், இதனால் தான் கருத்து சொல்றேன் – சமுத்திரக்கனி காட்டம்.

0
1502
samuthrakani
- Advertisement -

தமிழ் சினிமாவில் சமூக அக்கரை கொண்ட படங்களை கொடுப்பதில் வல்லவர் சமுத்திரகனி. இவரது படங்களில் எப்போதும் சமூக அக்கறை கொண்ட கருத்துக்கள் இருக்கும். இவர் புகழ் பெற்ற இயக்குனர் கே. பாலச்சந்தரன் இடம் துணை இயக்குனராக பணி புரிந்தவர். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகரும் ஆவார். பின் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த உன்னை சரணடைந்தேன் என்ற படத்தின் மூலம் தான் இவர் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழியில் படங்களை இயக்கியுள்ளார்.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் கடந்த பல வருடங்களாக சமூக அக்கரை கொண்ட படங்களை கொடுத்து வருகிறார் சமுத்திரகனி. இவரது படங்கள் எப்போதும் சமூகத்திற்கு கருத்து சொல்லும் வகையில் இருக்கும். கடந்த ஆண்டு சோசியல் மீடியாவில் தற்போது பயங்கர ட்ரெண்டிங்கில் சமுத்திரக்கனி மீம்ஸ்கள் தான் இருந்தது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சமுத்திரகனியிடம் அவரது படங்களில் பல கருத்து தான் இருக்கிறது என்ற விமர்சனங்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சமுத்திரக்கனி தன்னுடைய படங்கள் மூலமாக தான் செய்வது அறிவுரை கிடையாது அது ஒரு அக்கறை மக்கள் மீது எனக்கு இருக்கும் அக்கறை.

இதையும் பாருங்க : இந்த நாதஸ்வரம் சீரியல் நடிகைய ஞாபகம் இருக்கா ? நாளைக்கு திருமணம். மாப்பிள்ளை இவர் தான்.

- Advertisement -

நான் அனைவரையுமே என்னுடைய ரத்த சொந்தமாக தான் பார்க்கிறேன் அந்த அன்பின் காரணமாகத்தான் நான் கருத்துக்களை என் படங்கள் மூலமாக தெரிவிக்கிறேன். அதை நீங்கள் கேட்க விரும்பவில்லை என்றால் அதை விட்டு விடுங்கள் அதனால் எனக்கு ஒன்றும் இழப்பு கிடையாது. என்னுடைய கருத்து கேட்க விரும்புபவர்களுக்கு மட்டும்தான் அதையெல்லாம் நான் மீம் கிரியேட்டர்களுக்காக சொல்லவில்லை. அவர்கள் என்னுடைய படத்தை பார்க்கவேண்டும் என்று கூறவில்லை. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் பார்க்காதீர்கள்.

வீடியோவில் 7 : 42 நிமிடத்தில் பார்க்கவும்

என்னை விரும்புவோர்களுக்கு மட்டும்தான் இதை நான் செய்கிறேன் இதை நான் செய்துகொண்டே இருப்பேன். கருத்து சொல்லி நான் கோடி கோடியாக சம்பாதித்து விட்டேனா என்ன. அதனால் எனக்கு பலகோடி இழப்பு தான் வந்தது. ஆனால், எனக்கு என்னவென்றால் இத்தனை நாள் எனக்கு சமூகம் கொடுத்ததற்கு நான் சேர்த்து வைத்த பணத்தை வைத்து ஒரு நல்ல படைப்பாக கொடுக்கிறேன். என்றாவது ஒருநாள் நீ திருந்துவ இல்ல மாறவுல அன்றுவரை நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கொஞ்சம் காட்டமாக கூறியிருக்கிறார் சமுத்திரக்கனி.

-விளம்பரம்-
Advertisement