இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010 ஆண்டு வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றது. படம் வெளியான போது ஒரு சில விமர்சனங்களை எதிர்கொண்டாலும் தற்போது இந்த படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

க்ராபிக்ஸ் தொழில் நுட்பம் தமிழ் சினிமாவில் சரியாக பயன்படத்தப்படாமல் இருந்த காலகட்டத்தில் செல்வராகவன் இந்த படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளை அருமையாக கையாண்டிருப்பார். அதுபோக சோழர் பரம்பரையின் வரலாற்றை விவரிக்கும் காட்சி மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதே செல்வராகவன் இயக்கிதில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘புதுப்பேட்டை’ படமும் எப்போது இரண்டாம் பாகம் தயாராகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த இரண்டு படம் குறித்தும் இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement

அதில் வெளியே எங்கு சென்றாலும் நண்பர்கள் ‘புதுப்பேட்டை 2 ‘எப்போது ? என்று அன்பாய் கேட்கின்றனர். நடக்கும் என சொல்வேன். ஆயின் என் மனதுக்குள் கேட்கும் தீரா ஓசை “ஆயிரத்தில் ஒருவன் 2 “ எடுக்க வேண்டும் என்பதுதான்.சோழன் பயணம் தொடர வேண்டும் என்பது என்னுள் புதைந்து கிடக்கும் நீண்ட நாள் தாகம் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement
Advertisement