செம செம, நடிகராக களமிறங்கியுள்ள செல்வராகவன். யார் ஹீரோயின் தெரியுமா ? போஸ்டர் இதோ.

0
620
selva

தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். இவர் எப்போதும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர். நடிகர் தனுஷ் சினிமா உலகில் இந்த அளவிற்கு உயர்ந்து இருப்பதற்கு இவர் தான் காரணம். இவர் இயக்கத்தில் வெளிவந்த காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், யாரடி நீ மோகினி, இரண்டாம் உலகம் போன்ற பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று உள்ளது.

Image

கடந்த ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த படம் என்.ஜீ.கே. இந்தப் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை. இந்த படம் தோல்வி அடைந்ததை அடுத்து இவர் புதிய படம் இயக்குவதில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கி இருந்தார். செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடித்த மன்னவன் வந்தானடி, எஸ்.ஜே.சூர்யா நடித்த நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்கள் சில வருடங்களுக்கு முன்பே இயக்கி முடிந்தது. ஆனால், இன்னும் திரைக்கு வராமல் முடங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

செல்வராகவன் அடுத்து என்ன படத்தை இயக்கப் போகிறார் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது செல்வராகவன் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வஸந்த் ரவி, ரவீனா, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராக்கி’. இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. தற்போது அருண் மாதேஸ்வரனின் சாணிக் காகிதம் என்ற படத்தை இயக்க இருக்கிறார்.

‘சாணிக் காயிதம்’ என்ற பெயரில் உருவாகி வரும் இந்த படத்தில் தான் இயக்குனர் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகி இருக்கிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷுடன் சேர்ந்து நடிக்க இருக்கிறார். நடிகராக அறிமுகமாகி இருக்கும் செல்வராகவனுக்கு, தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், சாணிக் காயிதம்’ படத்தின் மூலம், உங்கள் நடிப்பின் வலிமையை நான் பார்த்ததைப் போல இந்த உலகமும் பார்க்கட்டும் செல்வா சார் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement