இந்தியன் 2 படத்தின் கதையை பற்றி ஸ்வாரஸ்ய தகவலை சொன்ன இயக்குனர் சங்கர்..!

0
287
Shnakar

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த “இந்தியன் ” திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டவது பாகம் தற்போது உருவாக உள்ளது.

indianpoja

சமீபத்தில் இந்த படத்தின் ஆரம்ப பணிகளும் பூஜையுடன் துவங்கியது. இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் பின்னர் கஜால் அகர்வால் கதாநாயகியாக கமிட் ஆகினார்.

மேலும், இந்தியன் முதல் பாகத்தில் நடித்திருந்த பிரபல மலையாள நடிகர் நெடுமுனி வேணு இந்த படத்தில் கமிட் ஆகியுள்ளார். மேலும், மலையாள நடிகர் துல்கர் சல்மானும் இந்தியன் 2 படத்தில் கமிட் ஆகியுள்ளார் என்ற செய்தி வெளியானது.

indian

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் சங்கர் இந்தியன் 2 குறித்து பேசுகையில், 22 வருடம் கழித்து நான் கமல் சாருடன் மீண்டும் இணைந்துள்ளேன். இந்தியன் படத்தின் முதல் பாகத்தை எடுத்த போது நான் அப்போது சந்தித்த பிரச்சனைகள், லஞ்சம், கேள்விபட்ட விடயம் என்று எல்லாவற்றையும் சேர்த்து கதை தயாரித்தேன்.

தற்போது இத்தனை ஆண்டுகள் கடந்துவிட்டது என்னை சுற்றியும் உங்களை சுற்றியும் தற்போது பல்வேறு பிரச்சனைகளும், எத்தனையோ தவறுகள் நடந்து கொண்டிருக்கிறது. அதில் எவையெல்லாம் நம்மை பாதித்து வருகிறதோ அதனை வைத்து தான் இந்த கதையை தயாரித்துள்ளேன் என்று கூறியுள்ளார் சங்கர்.