தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் கார்த்தி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருக்கிறது. தற்போது இவர் முத்தையா இயக்கத்தில் ‘விருமன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். குட்டிப் புலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் முத்தையா. அதனைத் தொடர்ந்து இவர் கொம்பன், மருது, தேவராட்டம், புலிகுத்தி பாண்டி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார். பெரும்பாலும் இவர் இயக்கிய படங்கள் எல்லாம் கிராமத்து பாணியில் இருக்கும்.
அதே போல் விருமன் படமும் கிராமத்து கதையம்சத்தில் உருவாகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே மதுரை, தேனி பகுதிகளில் தொடர்ச்சியாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமில்லாமல் இன்னும் சில மாதங்களில் விருமன் படம் திரைக்கு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
கார்த்தியின் விருமன் படம்:
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக புதுமுக நடிகை அதிதி சங்கர் நடிக்கிறார். இவர் வேற யாரும் இல்லைங்க, பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் இளைய மகள் தான். அதிதிசங்கர் டாக்டர் படிப்பை படித்து முடித்து உள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனை அடுத்து சமீபத்தில் தான் அவருக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.
டாக்டர் பட்டம் வாங்கிய அதிதி:
தான் பட்டம் வாங்கிய புகைப்படத்தையும், தன் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தையும் அதிதி சங்கர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். மேலும், சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்த படங்கள் வெளிவருவதற்கு முன்பே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். இந்த நிலையில் இவர் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார்.
மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்திய அதிதி:
அதில் அவர் அசர வைக்கும் அளவிற்கு மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை போட்டிருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்களும், நெட்டிசன்களும் ஷேர் செய்தும் லைக் செய்தும் வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் தற்போது சோசியல் மீடியாவில் அதிதி சங்கரின் லேட்டஸ்ட் புகைப்படம் தான் உலா வந்து கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். அதோடு இந்தப் புகைப்படத்தை பார்க்கும் போது தற்போதிருக்கும் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு அதிதி உள்ளார் என்றும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
சிம்பு படத்தில் கமிட்டான அதிதி:
மேலும், இந்த படத்தை தொடர்ந்து சிம்பு நடிக்க உள்ள கொரானா குமார் என்ற படத்தில் அதிதிசங்கர் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இதையடுத்து சிம்பு நடிப்பில், கெளதம் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு படமும் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இதனை தொடர்ந்து இயக்குநர் கோகுல் இயக்கும் கொரோனா குமார் (Corona Kumar) என்ற படத்தில் நடிக்கிறார் சிம்பு. இந்தப் படத்தையும் ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனமே தயாரிக்கிறது. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் கமிட்டாகி இருக்கிறார்.