செஸ் ஒளியம்பியாட் விழாவில் அதிதியை ஆட தேர்ந்தெடுத்தது ஏன் என்று விக்னேஷ் சிவன் கூறி இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் உலகில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் இயக்குனர் சங்கர். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் இவருடைய படங்கள் எல்லாமே பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
தற்போது இவர் ராம் சரணை வைத்து படம் இயக்கி வருகிறார். இந்த சூழ்நிலையில் இயக்குனர் சங்கரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர் தமிழ் சினிமா உலகில் கதாநாயகியாக களம் இறங்கி இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் முன்னணி ஹீரோவாக திகழ்ந்து கொண்டு இருக்கும் கார்த்தி படத்தில் தான் சங்கர் மகள் அதிதி நடித்து இருக்கிறார். கார்த்தி ஹீரோவாக நடித்து இருக்கும் படம் ‘விருமன்’. இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்கி வருகிறார்.
கொம்பன் படத்திற்கு பிறகு கார்த்திக் மற்றும் முத்தையா இந்த படத்தில் இணைந்துள்ளார்கள். இந்த படத்தை சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். விருமன் படமும் கிராமத்து கதையம்சத்தில் உருவாகி வருகிறது. இதனால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த படம் வெளியவர்க்கு முன்னரே அதிதி ஷங்கர் சிம்புவின் கொரோனா குமார் மற்றும் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன் ‘ போன்ற படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். இதனால் அதிதியை பலரும் நேபோட்டிசம் ப்ராடக்ட் என்று விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில் ஆத்மீகா கூட ” சிலருக்கு வாய்ப்புகள் ஈசியாக கிடைத்து விடுகிறது. மற்றவர்களின் நிலைமை பார்த்துக்கலாம் என்று பதிவு செய்திருந்தார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் சங்கர் மகள் அதிதியை பற்றி தான் இவர் மறைமுகமாகக் கூறி இருக்கிறார் என்று கமெண்ட் செய்தனர். இது ஒருபுறம் இருக்க சமீபத்தில் நடைபெற்ற செஸ் ஒலியம்பியாட் விழாவின் அறிமுக பாடலில் அதிதி ஷங்கர் நடனமாடி இருந்தார். தமிழ் சினிமாவில் பல நடிகைகள் இருந்தும் அறிமுக நடிகையான அதிதி இவ்வளவு பெரிய விழாவின் பாடலில் நடனமாடியது நேபோட்டிசம் ப்ராடக்ட் விமர்சனத்தை மேலும் அதிகரித்தது.
இப்படி ஒரு நிலையில் அதிதியை இந்த பாடலுக்கு ஆடவைத்தது ஏன் என்று விக்னேஷ் சிவன் கூறி இருக்கிறார். ஒரு தமிழ் முகம் இருக்கும் நபரை தேர்வு செய்து எல்லாம் என்று நாங்கள் நினைத்தோம். அப்படி தேடிக் கொண்டிருக்கும் போது அதிதியை தேர்வு செய்தோம். அவர் மிகவும் சிறப்பாக நடனமாடுவார் மிகவும் திறமைசாலி, அவருக்கான அங்கீகாரம் கிடைக்க வேண்டும். மேலும், சங்கர் சார் சொல்லி அவரை இந்த பாடலில் தமிழ் செய்யவில்லை ஆனால் இதுவரை சங்கர் சாரிடம் பேசியது கூட கிடையாது என்று கூறியுள்ளார்.