மகள் திருமணத்திற்கும் பிரம்மாண்ட செட் போட்ட ஷங்கர். அதுவும் யாரை வைத்து போட்டுள்ளார் பாருங்க.

0
1432
shankar
- Advertisement -

தமிழின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு மிக பெரிய பொக்கிஷம் தான்.இந்தியாவில் டாப் 5 இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் இதுவரை பல முன்னணி நடிகர்களை வைத்து 12 படங்களை இயக்கியுள்ளார். ஆரம்பத்தில் உதவி இயக்குனராக இருந்த ஷங்கர் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் கூட நடித்துள்ளார். ஜென்டில் மேன் படத்தின் மூலம் அறிமுகமான ஷங்கர் தற்போது வரை பல வெற்றிபடங்களை இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

தற்போது 57 வயதாகும் ஷங்கர் ஈஸ்வரி என்ற பெண்ணை பல ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார். ஷங்கருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர்.மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர், இளைய மகள் அதிதி ஷங்கர், மற்றும் மகன் அர்ஜித் ஷங்கர். இப்படி ஒரு நிலையில் ஷங்கரின் மூத்த மகளான விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது.

- Advertisement -

டாக்டரான ஐஸ்வர்யா ஷங்கர், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்தை திருமணம் செய்ய இருக்கிறார். தமிழ்நாடு பிரிமியர் லீகில் விளையாடும் மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளரும் தொழிலதிபருமான தாமோதரனின் மகன்தான் இந்த ரோஹித் என்பது குறிப்பிடத்தக்கது.

29 வயதான ரோஹித், தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்குள் விளையாட இடம்கிடைக்காததால் 2015-ல் இலங்கைக்குச் சென்றுவிளையாடியவர். அதன்பிறகு புதுச்சேரி ரஞ்சி அணி கேப்டனாகவும் மாறினார் ரோஹித்.ஐஸ்வர்யா – ரோஹித் திருமணம் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 27, 2021) அன்று மகாபலிபுரத்தில் நடக்க இருக்கிறது. 

-விளம்பரம்-
Rajinifans.com - Art director #Muthuraj - #2Point0 working... | Facebook
ரஜினினியுடன் கலை இயக்குனர் முத்துராஜ்

சங்கர் என்றாலே பிரம்மாண்டம் தானே, சினிமாவில் தனது படங்களுக்கு பல கோடி ரூபாய்க்கு செட் போட்டே பிரபலமான ஷங்கர் தனது மகள் திருமணத்துக்கும் பிரமாண்ட செட் அமைத்திருக்கிறார். ‘2.0’ படத்துக்கு கலை இயக்குநராகப் பணியாற்றிய முத்துராஜ் தான் ஷங்கர் மகள் திருமணத்துக்கும் செட் போட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கத்து.

Advertisement