இத்தனை ஆண்டுகள் கழித்து தன் படங்களில் வைத்த காட்சிகளால் சர்ச்சையில் சிக்கிய சங்கர்.

0
17116
shankar
- Advertisement -

தமிழின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு மிக பெரிய பொக்கிஷம் தான்.இந்தியாவில் டாப் 5 இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் இதுவரை பல முன்னணி நடிகர்களை வைத்து 12 படங்களை இயக்கியுள்ளார். ஆரம்பத்தில் உதவி இயக்குனராக இருந்த ஷங்கர் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் கூட நடித்துள்ளார். ஜென்டில் மேன் படத்தின் மூலம் அறிமுகமான ஷங்கர் தற்போது வரை பல வெற்றிபடங்களை இயக்கி இருக்கிறார்.

இயக்குனராக மட்டுமல்லாமல் சொந்தமாக எஸ் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார் ஷங்கர். இவர் இயக்கிய முதல்வன் படத்தை இவரே தயாரித்து இருந்தார். அதன் பின்னர் தான் இயக்கும் படங்களுக்கு பிரோடுயூஸ் செய்வதில்லை. தான் இயக்கும் படம் என்றால் பல கோடி பட்ஜெட் கொடுக்கும் ஷங்கர் இவர் தயாரிக்கும் பாடங்கள் எல்லாம் பட்ஜெட்டில் தான் திட்டமிடுவார்.

- Advertisement -

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஷங்கரின் 5 கோடி பட்ஜெட்டில் உங்களால் படம் பண்ண முடியுமா என்று கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. இதற்கு பதில் அளித்த ஷங்கர்,இதை நான் சுஜா சார்கிட்டயே சொன்னேன், அதற்கு அவர் ‘அவசியம் என்ன’ என்று கேட்கிறார். எங்கள் வீட்டிலேயே இப்படி ஒரு படம் பண்ணப்போகிறேன் என்று சொன்னால் நாங்க பாக்க மாட்டோம் என்று சொல்கிறார்கள் என்று கூறி இருந்தார். மேலும், 5 கோடி பட்ஜெட்டுக்காக படம் பண்ணக் கூடாது. ஒரு கதைக்கு இவ்வளவு தான் பட்ஜெட் தேவைப்படுகிறது என்றால் அப்போது பண்ணலாம் வேண்டும் கூறி இருந்தார்.

சமீப காலமாகவே ஷங்கர் சர்ச்சையில் சிக்கி வருகிறார். இந்தியன் 2 பட விவகாரம், அந்நியன் இந்தி ரீ – மேக் விவகாரம் என்று சர்ச்சையில் சிக்கி பின்னர் அதில் இருந்து மீண்டார். இப்படி ஒரு நிலையில் ஷங்கரின் படங்களில் இடம்பெறும் காட்சிகள், வசனங்கள் மற்றும் சமூகம் மீது அவருக்கு இருக்கும் பார்வை ஆகியது தற்போது நெட்டிசன்களால் விமர்சிக்கிக்கப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

அதிலும் குறிப்பாக, முதல்வன் படத்தின் சேரியில் இருக்கும் பொறுக்கி பசங்க எங்களை கண்ட இடத்தில் தொடுகிறார்கள் என்று ஒரு நாள் முதல்வரான அர்ஜுனிடம் மாணவிகள் புகார் கூறுவார்கள். ஆனால்., அதே அர்ஜுன் தான் மனிஷா கொய்றாளா குளிப்பதை படம் எடுப்பார் என்றும் ஷங்கருக்கு சேரியில் வாழ்பவர்கள் மீது எப்போதும் ஒரு தவாறன பார்வை இருக்கிறது என்றும் நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார்.

மற்றொரு ட்விட்டர் வாசி, சங்கரின் சிவாஜி படத்தை உதாரணம் காட்டி, “யார பாத்து கருப்புங்கிற”னு பொங்குற அதே விவேக் தான்,அங்கவை சங்கவை-ய பாத்து “ரொம்ப பொங்க வெச்சுட்டீங்க”னு ROFL பண்ணுவார். ரஜினியே “போடா சொட்டை”னு இன்னொருத்தர கிண்டல் பண்றது அப்படத்தின் தனிச்சிறப்பு என்று பதிவிட்டுள்ளார். இன்னொரு ட்விட்டர் வாசி அந்நியன் படத்தை உதாரணம் காட்டியுள்ளார்.

அதில், பிரேக் வயர் சரியா தயாரிக்கல, சாப்பாடு சரியா செய்யல, சோம்பேறி தனத்துகுலாம் கொலை பண்ண தெரியுது.ஆனா டேக்ஸ் கட்டாம பிராடு பண்ற ஹீரோயின், ரெக்கமண்டேஷன் பண்ண தாத்தாவ மட்டும் கொலை பண்றப்ப நூல் கண்ணை மறைச்சிருதோ? என்று பதிவிட்டுள்ளார். இப்படி ஷங்கரின் படங்களில் இடம்பெற்ற காட்சிகள் தற்போது விமர்சிக்கப்பட்டு வருகிறது.

Advertisement