‘இப்போதா Kgf2வ பாத்தேன்’ – படத்தை பார்த்துவிட்டு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் போட்ட பதிவு. என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
263
shankar
- Advertisement -

சமீபத்தில் வெளியாகி pan இந்திய அளவில் வெற்றி பெற்ற kgf 2 படம் குறித்து ஷங்கர் போட்ட பதிவு வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஷங்கர். இவரின் அனைத்து படங்களுமே பிரம்மாண்டத்தின் உச்சமாக இருக்கும். அதனால் தான் இவரை பிரம்மாண்ட இயக்குநர் என்று அழைக்கிறார்கள். சமூகத்திற்கு தேவையான நல்ல கருத்து, ஹீரோவுக்கான மாஸ், இதுவரை யாரும் பாத்திராத லொகேஷன்களில் ஷூட்டிங் என அந்த பிரம்மாண்டத்திற்குள் இவை அனைத்தும் அடங்கும். இறுதியாக இவர் 2018 ஆம் ஆண்டு 2.0 படத்தை இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-
Kgf

இதை தொடர்ந்து இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். ஆனால், இந்த படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க தெலுங்கில் ராம் சரணை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இயக்குனர் ஷங்கர் தரமான படங்களை பாராட்ட என்றும் தவறியதில்லை. அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த kgf2 படத்தை பார்த்துவிட்டு ஷங்கர் போட்ட பதிவு வைரலாகி வருகிறது.

இதையும் பாருங்க : திருமணதிற்க்கு தயாராக மேக்கப் போட்டு கொண்டிருந்த மனைவி, ஓரமாக அமர்ந்து ரசித்த இமான். வைரலாகும் வீடியோ.

- Advertisement -

மாபெரும் வெற்றிபெற்ற Kgf2 :

கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் யாஷ். இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது கே ஜி எப் திரைப்படம் தான். இந்த படம் கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்தது. இதனை தொடர்ந்து தற்போது கே ஜி எஃப் 2 படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்திருக்கிறார். இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார் மற்றும் பவுன் கௌடா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கொன்று கேஜிஎப்பில் கால் தடம் பதித்து இரண்டாம் கதையை துவங்குகிறார் யாஷ் . ஆனால், அது அங்கிருக்கும் பலருக்கு பிடிக்காமல் போகிறது. கேஜிஎப் இடத்தில் இருந்து யாஷை தூக்க வேண்டும் என்று பலரும் திட்டங்களை தீட்டுகின்றனர். இறுதியில் யாஷ் கேஜிஎப் மக்களை காப்பாற்றினாரா? எதிரிகளை துவம்சம் செய்தாரா? மக்களின் நிலைமை என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை.

-விளம்பரம்-

Kgf2 குறித்து ஷங்கர் :

படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் யாஷ் தனி ஒருவனாக படத்தை தாங்கி சென்றிருக்கிறார். மாஸ் ஹீரோவாக எல்லோர் மனதிலும் நிற்கிறார். படத்தில் ஒவ்வொரு நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்துள்ளனர். இயக்கம், திரைக்கதை என இரண்டிலுமே பிரசாந்த் நீல் மிரட்டி இருக்கிறார். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் 2 மடங்கு மாசாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர்.

பெரியப்பா அனுபவத்திற்கு நன்றி :

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை சமீபத்தில் பார்த்த ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது ‘இறுதியாக Kgf2வை பார்த்தேன். சிறந்த கதை, திரைக்கதை,எடிட்டிங். ஆக்ஷன் மற்றும் வசனங்கள் மிகவும் சிறப்பாக இருந்தது. யாஷ் ஸ்டைல் மாஸாக இருந்தது. பெரியப்பா அனுபவத்தை கொடுத்த இயக்குனர் பிரசாந்த் நீலுக்கு நன்றி. அன்பறிவு மற்றும் மொத்த குழுவும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement