வெளிநாட்டுகாரங்க இந்தியா வந்தா ? – ராஜமௌலி போட்ட அதிருப்தி பதிவு – டெல்லி விமான நிர்வாகம் பதில்.

0
887
- Advertisement -

தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. 2001-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளி வந்த திரைப்படம் ‘ஸ்டுடண்ட் நம்பர் 1’. இது தான் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய முதல் திரைப்படமாம். இதில் ஹீரோவாக ஜூனியர் என்டிஆர் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரின் ‘சிம்ஹத்ரி’, நித்தினின் ‘ஷை’, பிரபாஸின் ‘சத்ரபதி’, ரவி தேஜாவின் ‘விக்ரமார்குடு’ என அடுத்தடுத்து பல படங்களை இயக்கினார் எஸ்.எஸ்.ராஜமௌலி. தெலுங்கு திரையுலகுடன் நம் திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, ‘நான் ஈ, பாகுபலி 1 & 2’ ஆகிய படங்களை தமிழிலும் வெளியிட்டார்.

- Advertisement -

இந்த மூன்று படங்களுமே மெகா ஹிட்டாகி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தந்தது. சமீபத்தில் ராஜமௌலி, டெல்லி விமான நிலையத்தில் தனுக்கு நேர்ந்த அனுபவம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், டெல்லி விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது, கொரோனா பிசிஆர் படிவங்கள் வழங்கப்பட்டது. ஆனால், அந்த படிவங்களை நிரப்ப தரையில் அமர்ந்தும் சுற்றில் வைத்து எழுதி பூர்த்தி செய்தனர்.

படிவங்களை பூர்த்தி செய்வதற்கு மேஜைகள் கொடுப்பது எளிதான சேவை. அதோடு விமான நிலையத்தின் வெளிப்புற கதவு அருகில் அதிக அளவில் தெரு நாய்கள் உள்ளது. இது இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டவருக்கு நல்ல அபிப்ராயத்தை தராது, தயவு செய்து இதை கவனியுங்கள் என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள டெல்லி விமான சேவை நிர்வாகம்,

-விளம்பரம்-

ஏற்கனவே ஒரு பகுதியில் படிவங்களை பூர்த்தி செய்ய மேஜைகள் இருப்பதாகவும் இருப்பினும் தாங்கள் கொடுத்துள்ள மதிப்பீட்டை கருத்தில் கொண்டு விரைவில் சரி செய்கிறோம் என்றும் பதில் அளித்துள்ளது. தற்போது ஜூனியர் என் தி ஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement