இரண்டு நாள் அழுதுட்டே இருந்தேன், ரசிகர்கள் இல்லை – மதகஜராஜா படம் பற்றி எமோஷனலாக இயக்குனர் சுந்தர்.சி சொன்னது

0
150
- Advertisement -

மதகஜராஜா படம் பற்றி ரிலீஸ்க்கு பின் விஷால் கொடுத்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சுந்தர்.சி மற்றும் விஷால் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தான் மதகஜராஜா. இந்த படத்தில் விஷாலுடன் சந்தானம், சோனு சூட், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு உட்பட பலர் நடித்து இருந்தார்கள். ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார்.

-விளம்பரம்-

அது மட்டும் இல்லாமல் இந்த படம் 2015 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகுவதாக இருந்தது. ஆனால், சில பிரச்சனை ஏற்பட்டதால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. சமீபத்தில் தான் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி மதகஜராஜா படம் வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். 12 வருடம் கழித்து இந்த படம் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதோடு சமீபத்தில் இந்த படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடைபெற்று இருந்தது.

- Advertisement -

மதகஜராஜா படம்:

அப்போது விஷால் மேடை ஏறி பேசிய போது அவருடைய கை, கால்கள் நடுங்கி இருந்தது. குரலிலும் நடுக்கம் தெரிந்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் விஷாலுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி ஆயிட்டாரு? என்று கேட்டு இருக்கிறார்கள். உண்மையில் விஷாலுக்கு வைரல் காய்ச்சல் வந்திருக்கிறது என்று கூறி இருந்தார்கள். தற்போது விஷால் நன்றாக இருக்கிறார். மேலும், இந்த படம் திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் இயக்குனர் சுந்தர்.சி அவர்கள் தன்னுடைய மனைவி குஷ்பூ உடன் சேர்ந்து தியேட்டருக்கு மதகஜராஜா படம் பார்க்க சென்று இருந்தார்.

சுந்தர் சி பேட்டி:

அப்போது செய்தியாளர்களை சந்தித்த சுந்தர் சி, கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்பு இதே பொங்கல் நாளில் தான் ரசிகர்கள் இல்லை என்னுடைய தெய்வங்கள் உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலமாக எனக்கு வாழ்க்கை கொடுத்தார்கள். 30 வருடங்களாக அவர்களுடைய ஆசிர்வாதத்தாலும் தயவாலும் தான் என்னுடைய வாழ்க்கை நல்லபடியாக சென்று கொண்டிருக்கின்றது. தற்போது இந்த மதகஜராஜா படத்தின் மூலமாக எனக்கு மீண்டும் மிகப்பெரிய வாழ்க்கை கொடுத்திருக்கிறார்கள். இந்த படத்தை எல்லோரும் 12 வருடங்களுக்குப் பிறகு வெளியாகியிருக்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால், என்னை பொறுத்தவரை ஒரு கும்பமேளா தாண்டி வெளியாகியிருக்கிறது என்றுதான் சொல்லணும்.

-விளம்பரம்-

படத்தின் விமர்சனம்:

ரசிகர்களுடைய வரவேற்பினால் நான் கடந்த இரண்டு நாட்களாகவே கண்ணீரோடு தான் இருக்கிறேன். அந்த அளவிற்கு என்னை நெகிழ வைத்து விட்டார்கள். ஒரு படத்திற்கு நூற்றுக்கு நூறு பாசிடிவான விமர்சனம் வந்தது என்றால் நான் மதகஜராஜா படத்தை தான் சொல்லுவேன். எனக்கும் என்னுடைய குடும்பத்திற்கு மட்டுமில்லாமல் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் எல்லோருமே இந்த பொங்கல் சிறப்பான பொங்கல். மதகஜராஜா மட்டும் இல்லாமல் அதனுடன் வந்த மற்ற படங்களும் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று நான் கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.

படம் பற்றி சொன்னது:

என்னை பொருத்தவரை ரசிகர்கள் சந்தோஷமாக படம் பார்த்து சிரிக்க வேண்டும், அவ்வளவுதான். மதகஜராஜா படத்தை உண்மையிலேயே மூன்று மாதங்களுக்கு முன்பாகவே நாங்கள் பிரீயூ செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தோம். நான் படத்தை எடுக்கும்போது இந்த படம் பொங்கல் திரைப்படமாக இருக்க வேண்டும் என்று நான் நினைத்திருந்தேன். இந்த பொங்கலுக்கு தொடர்ச்சியாக 10 நாட்கள் விடுமுறை வந்ததை என்னால் பார்க்க முடிந்தது. ஒரு நான்கு நண்பர்கள்
கல்யாணத்திற்கு கிராமத்திற்கு செல்கிறார்கள் என்ற கதையில் அடித்தளத்தில் தான் இந்த படத்தை எடுத்தோம். நினைத்தபடி ரசிகர்களுடைய கருணையால் இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றுவிட்டது என்று கூறி இருக்கிறார்.

Advertisement