அவர ஏன் இப்படி பண்றீங்க,ப்ளீஸ் – கேப்டனின் வீடீயோவை கண்டு வருந்திய சுசீந்திரன்.

0
253
- Advertisement -

விஜயகாந்தின் உடல்நிலையை பார்த்து மனம் நொந்து இயக்குனர் சுசீந்திரன் போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் உச்ச நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் சினிமா உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

0 தொடங்கி 2k வரை பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார் விஜயகாந்த். பின் அவர் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இவர் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் தேமுதிக கட்சியை அவருடைய மனைவி பிரேமலதா மற்றும் மகன்கள் தான் பார்த்து கொண்டு வருகின்றனர். இப்படி இருக்கும் நிலையில் கடந்த மாதம் விஜயகாந்த் அவர்கள் இருமல், சளி அதிகமாக உள்ளதால் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இருந்தது.

- Advertisement -

விஜயகாந்த் உடல்நிலை:

இதனால் இவரை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்திருக்கிறார்கள். பின் விஜயகாந்தின் நுரையீரலில் பிரச்சனை இருப்பதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தது. இதை அறிந்த விஜயகாந்தின் ரசிகர்களும், தொண்டர்களும் கண்ணீர் மல்க கதறி அழுது இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் பலருமே கோயில்களில் விஜயகாந்த் உடல் நலம் தேறி மீண்டு வர வேண்டும் என்று பிரார்த்தனைகளையும் அபிஷேகங்களையும் செய்து இருந்தார்கள்.

கேப்டனின் உடல் நிலை :

கடந்த சில வாரமாகவே சோசியல் மீடியா முழுவதும் விஜயகாந்த் உடல்நிலை குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது. அதில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து மோசமான வதந்திகள் பரவி இருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்து விஜயகாந்த் உடல்நிலை குறித்து பேட்டி அளித்து இருந்தார். பின் விஜயகாந்த் உயிருக்கு ஆபத்தான கட்டத்தை தாண்டி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. பிரபலங்கள் பலருமே விஜயகாந்தை நேரில் பார்க்க சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

சரிந்து விழ பார்த்த கேப்டன் :

மேலும், கடந்த 11-ம் தேதி விஜயகாந்த் வீடு திரும்பி இருக்கிறார். அவர் பூணமாக குணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் தேமுதிக கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது நாற்கலையில் அழைத்து வரப்பட்ட கேப்டனை பார்த்து தொண்டர்கள் கதறி அழுதனர். அதிலும் ஒரு கட்டத்தில் நாற்காலியில் இருந்து அப்படியே சரிந்து விழபார்த்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை தாங்கி பிடித்தனர்.

சுசீந்திரன் உருக்கம் :

இப்படி ஒரு நிலையில் கேப்டனின் இந்த வீடியோவை கண்ட இயக்குனர் சுசீந்திரன் ‘கேப்டன் திரு. விஜய்காந்த் அவர்களுக்கு , இப்பொழுது சரியான ஓய்வு தேவை . அவர் பூரண குணமடையும்வரை அவரை இப்படியெல்லாம் கஷ்ட்டப்படுத்தாதீர்கள் please … பிடித்த ஒரு ‘நல்ல மனிதரை ‘ இப்படி பார்க்க ரொம்பவே கஷ்ட்டமா இருக்கு’ என்று பதிவிட்டு தனது ஆதங்கத்தை தெரிவித்து இருக்கிறார்.

Advertisement